SCHOOL EXAMS: பள்ளிகளில் இனி 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கிடையாது. ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!!!
  • 13:39PM Jan 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 13:39PM Jan 04,2019 Chennai

பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இலவச மற்றும் கட்டாயத் தேர்ச்சி கல்வி சட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தோல்வியடைய வைக்காமல் அடுத்தடுத்து வகுப்புக்கு தேர்ச்சியடைய செய்ய வேண்டும் என கூறப்பட்டது. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.

ஆனால் இந்த நடைமுறையால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களிடம் படிப்பில் ஆர்வம் குறைந்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யும் வகையிலான நடவடிக்கைகளை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 5 மற்றும் 8-ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்த வேண்டும், அதிலும் தோல்வியடைந்தால் அவர்களை அதே வகுப்பில் மீண்டும் பயிலச் செய்ய வேண்டும் அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள கட்டாய தேர்ச்சி திட்டத்தையே ரத்து செய்துவிடலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்த முடிவுகளை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பேசிய மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு, சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படவுள்ளது என அறிவித்துள்ளார்.

You Might Also Like These
Related Stories
Top