Exquisite

தமிழ்நாட்டிலும் உள்ள Rainbow river..!! இத்தனை நாள் தெரியாம போச்சே, மறக்காம ஒரு visit செய்யுங்க,

Apr 11 2018 07:30:12 AM

படத்தில் உள்ள Rainbow river UK வில் உள்ளது.என்ன இங்குள்ள நீர் பல வண்ணத்தில் ஓடுகிறது என்று பார்க்கிறீர்களா? இங்குள்ள ஒரு வகை தாவரம் தான் இந்த வண்ணத்திற்கு காரணம்.சிவப்பு நிறத்தில் மட்டுமின்றி பல நிறங்களில் இந்த தாவரங்கள்  இங்கு உண்டு.அதனாலே இந்த வண்ண பொழிவு
தமிழ்நாட்டிலும் இந்த பல வண்ண ஆறு உண்டு.ஆமாம் நாம் சென்று பார்க்கும் தூரத்தில் தான் உள்ளது.மறக்காம visit செய்யுங்க.   
 
 
தமிழ்நாடே காவிரிக்காக போராடிவருகிறது. தமிழ்நாட்டையே பிறப்பிடமாக கொண்ட பிற ஆறுகளை எல்லாம் தொலைத்துவிட்டோம். காவிரிக்காக மட்டும் போராடும் மக்கள் சற்று இதையும் உற்று நோக்க வேண்டும்.சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறே காணாமல் போய்விட்டது. இந்த சாயப்பட்டறை கழிவுநீரைத்தான் பல வண்ணம் என குறிப்பிட்டேன்.
 
 
இந்த சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று பல விவசாயிகள் போராடினார்கள்.நீதிமன்றமோ சாயகழிவுகள் சுத்திகரிக்கப்பட்டால் மட்டும் பட்டறைகள் இருக்கட்டும் இல்லையென்றால் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.பலன் சில சாயப்பட்டறைகள் மூடப்பட்டது.ஆனால் கழிவுநீர் ஆற்றில் கலப்பது நின்றபாடில்லை.
 
 
சாயப்பட்டறைகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கு தீர்வாக சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்ட உடனே அரசு பொது சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். இதன் மூலம் சாயப்பட்டறை கழிவுநீரானது சுத்திகரிக்கப்படும்.இதனால் நமது ஆறுகளும் காக்கப்படும்.இனியாவது இருக்கும் ஆறுகளை போற்றி பாதுகாக்கும் செயலில் ஈடுபடவேண்டும்