இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா..?? அடம்பிடிக்கும் அரசியல்வாதி, அதிர்ந்து நிற்கும் தேர்தல் அதிகாரிகள்..!!
  • 18:46PM Apr 13,2019 Puthukottai
  • Written By AP
  • Written By AP
  • 18:46PM Apr 13,2019 Puthukottai

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருவதால் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.. சந்தேகத்திற்குரிய வகையிலான அதீத பணம் இருக்க பெறின் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர் . தமிழகம் முழுவதும் ஒரு வாகனத்தையும் விடாமல் சோதனை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை- தஞ்சை பகுதிகளில் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கையில்,அந்த வழியாக வந்த காரில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் இருந்துள்ளார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு தனது எளிமையான தோற்றத்தாலும் வாழ்வியல் முறையாலும் அனைவராலும் ஈர்க்கப்படும் நபர்.காரில் இருப்பது நல்லக்கண்ணு என தெரியாத அதிகாரிகள் காரை நிறுத்திவிட்டனர், பின்னர் உள்ளே நல்லக்கண்ணு அவர்களை பார்த்ததும் ஐயா நீங்களா,எலெக்ஷனுக்காக வரும் வண்டிகளை சோதனை செய்து கொண்டிருக்கிறோம்..நீங்க போங்க என கூறியுள்ளனர்

நல்லக்கண்ணு அவர்களோ அதிகாரிகளிடம், காரில் ஒன்றுமில்லை என உறுதியான பின்னரே என்னை அனுப்புங்கள், நீங்க சோதனை செய்யாமல் நான் இங்கிருந்து போக மாட்டேன் ,யாராக இருந்தாலும் சோதனை செய்யுங்க என கூறியுள்ளார்..

நல்லக்கண்ணு அவர்களின் பிடிவாதத்தால் அதிகாரிகள் சோதனை செய்தனர்..சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் காரில் ஒன்றுமில்லையாம்..இவரது இந்த நேர்மையை கண்ட அதிகாரிகள்,இந்த காலத்திலும் இப்படி ஒரு அரசியல்வாதியா என நல்லக்கண்ணு குறித்து அதிர்ந்து போய் பேசியுள்ளனர்..சில தினங்களுக்கு முன்னதாக சேலம் அருகே பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருந்த டிடிவி தினகரன் காரை திடீரென எலெக்சன் கமிஷன் அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். ஆனால் டிடிவி வாகனத்தை நிறுத்தவில்லை.இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் டிடிவி தினகரன் மீது அளித்த குற்றசாட்டின் அடிப்படையில் சேலம் வீராணம் பகுதி போலீஸ் அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top