மீண்டும் தொடங்கும் இனப்படுகொலை ....
  • 10:22AM Oct 02,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:22AM Oct 02,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்தியாவில் இன்று காந்தி ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு தெருக்களிலும் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வருகின்றனர். ஆனால் அவர் பிறந்த குஜராத் மண்ணில் ஒரு பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது.

blog_Ahmedabad.png 

குஜராத்தில் கார்பா கலை நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப்பெற்றது.நவராத்திரியை முன்னிட்டு அங்குக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.அந்த நிகழ்ச்சியைக் காண வந்த ஜெயேஷ் சோலங்கி மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் மீது கடுமையான தாக்குதல் நடைபெற்றுள்ளது. அவர்கள் தலித் என்பதால் அவர்களுக்குக் கார்பாவை காணத் தகுதி இல்லை என்று கூறி அவர்களை  அடித்துள்ளனர். ஜெயேஷ் மயக்க நிலையில் இருந்துள்ளார் , அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இது போல் சம்பவங்கள் குஜராத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.காவல் துறையும் எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

 Gujarat_Communal_Violence_B.jpg

சாதிகள் இல்லை என்று கூறிவரும் இந்தக் காலத்தில் இத்தகைய செயல் மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது.சம்பவத்தன்று அங்குக் காவலில் இருந்தவர்களும் தடுக்காமல் இருந்துள்ளனர்.ஒரு சாதாரண நிகழ்ச்சியைக் கூடக் காணத் தகுதி வேண்டுமா நம் நாட்டில் ??..

MG.jpg 

பெருந்தலைவர்களின் பிறந்தநாட்களைக் கோலாகலமாகக் கொண்டாடுவதை விட்டுவிட்டு அவர்கள் கூறிய சில கருத்துக்கள் மற்றும் அவர்களின் கொள்கைகளை நாம் பின்பற்றுவதே அவர்களின் பிறந்த நாளிற்கு நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஆகும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top