#COLORADO: உலகில் INSULIN விலைக்கு உச்சவரம்பு போடத் துணிந்த ஒரே மாநிலம்!!! DIABETES நோயாளிகளுக்கு மிச்சம்தான்!!!
  • 18:58PM Jul 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:58PM Jul 05,2019 Chennai

பொதுவாக மருத்துவத் துறையைப் பொறுத்த வரை, CORPORATE-களும், DRUG MAFIA-க்களும்தான் ஆதிக்கம் செலுத்தி வருவார்கள். உலகத்தில், அதிகத் தேவையை உருவாக்கத் திட்டமிடுபவர்களும் இவர்கள்தான், அந்த மருந்துகளுக்கான விலையை நிர்ணயம் செய்பவர்களும் இவர்கள்தான். என்னதான் குறைந்த விலை என்று GENERIC MEDICINE-களைப் பற்றிப் பேசினாலும், அவை சந்தைக்கு வருவதை மறைமுகமாகக் கட்டுப்படுத்துவதும் இவர்கள்தான். அதனால், உலகளவில் மருந்து விலைகளைக் கிட்டத்தட்ட எந்த அரசாங்கமும் நெறிப்படுத்த முன்வருவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையை மாற்றியமைத்த, COLORADO STATE GOVERNMENT, வரும் JANUARY முதல் DIABETES நோயாளிகளுக்கான மாதாந்திர மருத்துவச் செலவுகள் 100 DOLLAR-ஐத் தாண்டக் கூடாது என்று உத்திரவிட்டுள்ளது. நம் ஊர் மதிப்பில் கணக்குப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவர்கள் பணத்தின் மதிப்பை வைத்துப் பார்க்கும் போது, இந்த மாதிரியான TREATMENT-க்கு ரொம்பவே குறைவுதான். காரணம், கிட்டத்தட்ட 600 DOLLAR முதல் 900 DOLLAR-கள் செலவு செய்திருக்கிறார்களாம். கடந்த 14 ஆண்டுகளில், 555% விலை உயர்வைச் சந்தித்த ஒரே PRODUCT – INSULIN-தானாம்.

சரி, இதை எப்படிச் செய்தார்கள் என்றால், நேரடியாக அவர்களுடன் மோதாமல், COLORADO மக்களுக்கான PRIVATE INSURANCE PLAN-களில் சில மாற்றங்களைச் செய்து இதைச் சாதித்திருக்கிறார்கள். என்ன விலை போட்டிருந்தாலும், அவர்களுக்குக் கிடைக்கப் போவதென்னவோ 100 DOLLAR-கள்தான். சுற்றியுள்ள மாநிலங்களின் விலையைப் பாதிக்காமல், COLORADO மக்களுக்கு மட்டும் நேரடியாக நன்மை. வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அதிக விலை காரணமாக நாலில் ஒருவர், INSULIN சரியாகப் போட்டுக் கொள்வதில்லையாம். குறைந்தபட்சம் மக்களைக் காப்பாற்ற இப்படியாவது திட்டத்தைச் செயல்படுத்துகிறதே அரசு!!!

Diabetes Food Chart  |  Curry Leaves Benefits  |  Sleep Deprivation  |  Diabetes Mellitus  |  Jaggery Sugar Benefits  |  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top