WOMEN’S DAY: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள்!!! வாழ்த்துகள்!!!
  • 14:39PM Mar 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 14:39PM Mar 09,2019 Chennai

 

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொரிலாளி சுரேஷ் என்பவர் மனைவி சிந்து. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் வாழ்க்கையில் கடந்த ஆண்டு இன்னொரு இன்ப அதிர்ச்சி. கருவுற்றிருந்த சிந்து, கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு கால சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது SCAN செய்து பார்த்ததில், சிந்துவுக்கு மூன்று குழந்தைகள் கருவில் வளர்வது தெரிய வரவே அதற்கேற்றபடி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினத்தில் சிந்துவிற்கு மூன்று பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகள் 1.75 கிலோ எடையிலும் ஒரு குழந்தை 1.5 கிலோ எடையிலும் பிறந்துள்ளது. மேலும் மூன்று குழந்தைகளும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வர், மருத்துவர் அசோகன் தெரிவித்துள்ளார்.

WOMEN’S DAY தினமான நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளியின் மனைவி ஒருவருக்கு, முதல் பிரசவத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பது என்பது பெரும்பாலும் சிக்கலான பிரசவங்களாக இருக்கும். இந்த சூழலில் கோவை அரசு மருத்துவமனை தற்போது வெற்றிகரமாக சிகிச்சை செய்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் அசோகன் குறிப்பிட்டார். மேலும் குழந்தைகளின் தந்தை சுரேஷ் கூறும்போது, குடும்பத்தில் மூத்தவரான தனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். வாழ்க வளமுடன்!!!

Top