#Fake Love: அந்த மூஞ்சிக்கும், இந்த மூஞ்சிக்கும் சம்பந்தமே இல்லையே - பேஸ்புக்கில் காதல், நேரில் பார்த்ததும் மோதல்!
  • 14:51PM Sep 24,2019 Coimbatore
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:51PM Sep 24,2019 Coimbatore

இந்த பேஸ்புக், டிக்-டாக் வந்ததும் வந்தது இன்றைய இளம் தலைமுறை புது புது வழிகளில் எல்லாம் சீரழிவதை காண சகிக்க முடியவில்லை. டிக்-டாக் நட்பால் தோழியுடன் ஓடிப்போன இளம்பெண், ஆசிரியையுடன் ஓடிப்போன மாணவன் என்று எந்தெந்த  சீர்கேடு எல்லாம் நடக்க கூடாதோ, எல்லாம் இந்த டெக்னாலஜி வரவால் நடக்கிறது.

சமீபத்தில் கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெண்கள் கல்லூரிக்கு வெளியே ஒரு மாணவி கல்லூரிக்குள் செல்ல முயல்கிறார். ஒரு வாலிபர் அவர் கையை பிடித்து தடுக்கிறார். இப்படியே தொடர்ந்து நடக்க சுத்தி இருந்தவர்கள் அந்த வாலிபரிடம் சென்று, ஏன் அந்த பெண்ணிடம் இப்படி நடக்கிறாய் என்று கேட்டதுக்கு. "உங்கள் வேலையை பாருங்கள்" என்று  சொல்லவே. சுற்றி இருந்தவர்கள் 'சிறப்பாக' கவனித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

விசாரணையில் அந்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டதை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. பேஸ்புக்கில் டிப்டாப்பாக உடை அணிந்து அந்த பாடத்தை மாணவிக்கு அனுப்பியிருக்கிறார். அதனை பார்த்த மாணவி, தொடர்ந்து அவரிடம் பேசி வந்துள்ளார். எவ்வளவு நாள் தான் பேஸ்புக்கில் பேசுவது, ஒரு நாள் நேரில் பார்க்கலாம் என்று முடிவெடுத்து கோவை வந்துள்ளார் வாலிபர்.

மாணவியின் முன் சென்று நின்ற போது, பேஸ்புக்கில் அனுப்பிய போட்டோவுக்கும், நேரில் பார்ப்பதற்கும் பயங்கர வித்தியாசம் இருந்திருக்கிறது. அந்த மாதிரி நீங்கள் இல்லை என்று கூறி, கல்லூரிக்குள் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறு தான் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. இனி மாணவியை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு ஊர் பக்கம் திரும்பியுள்ளார் அந்த வாலிபர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top