பல்வேறு சாகசங்களை செய்யும் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பிரபலம் 50 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்துவிட்டு பின்னர் வெளியே உயிருடன் திரும்பி வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். வித்தியாசமான செயல்கள் செய்து மக்களிடையே பிரபலமடைந்த இவர் கிட்டத்தட்ட 57 மில்லியன் பார்வையாளர்களை வைத்திருக்கிறார்.
சவப்பெட்டிக்குள் புகுந்து சாகசம் செய்ய திட்டமிட்ட பீஸ்ட் தனது நண்பர்களுடன் சேர்ந்து இதற்கான திட்டத்தை உருவாக்கினார். சவப்பெட்டிக்குள் குளிர்சாதன வசதி, குடிப்பதற்கு தேவையான தண்ணீர், சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன், உண்பதற்கு உணவு, படுப்பதற்கு தேவையான தலையணை, தொடர்புகொள்வதற்காக வாக்கி டாக்கி மற்றும் செல்போன் இவையனைத்தையும் வைத்து புதைக்கப்பட்டார். அவரை கண்காணிப்பதற்கு சவப்பெட்டிக்குள் கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 50 மணிநேரம் இந்த சவப்பெட்டிக்குள் ஜாலியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் குளிர் அதிகமானதால் வெளியே எடுக்கும்படி கூறியுள்ளார். பிறகு அவரது நண்பர்கள் அவரை சவப்பெட்டிக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர். சவப்பட்டி மிகவும் குளிர்ந்து போனதால் அவருடைய காலில் இரத்தம் உறைந்து போனது. தனது 50 மணிநேர சாகசத்தை 12 நிமிட வீடியோவாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் எக்காரணம் கொண்டும் இப்படி வீட்டில் யாரும் முயற்சி செய்து பார்க்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.