#NATURALREMEDY: தேங்காய் எண்ணெய் முடிக்கு நல்லது என்று தெரியும்!!! எதனால் என்று தெரியுமா???
  • 10:55AM Jun 02,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 10:55AM Jun 02,2020 Chennai

தலைமுடி கொட்டுபவர்களிடமோ, வழுக்கை விழுந்தவர்களிடமோ கேட்டுப் பாருங்கள். அதனால் ஏற்படும் மன உளைச்சலைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ள வேண்டுமானால், நமக்கும் அந்த நிலை ஏற்பட்டால்தான் உண்டு. தேங்காய் எண்ணெய் முடிக்கு நல்லது என்று நம் அனைவருக்கும் சொல்லி இருப்பார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், தேங்காய் எண்ணெய் தடவினால், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளர வைக்கும் ஆற்றல் அதற்குக் கிடையாது. ஆனாலும், தலைமுடியின் ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்திப் பாதுகாக்கத் துணை புரியும். எப்படி என்று பார்க்கலாம்!!!

coconut.jpg

#1. தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ANTI-MICROBIAL பண்புகள் காரணமாக, தலைமுடியில் BACTERIA வளர்வது தடுக்கப்படுகிறது.

#2. தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பதால், தலையின் மேற்பகுதித் தோல் (SCALP) மற்றும் முடி இரண்டும் உலர்ந்துபோவது தடுக்கப்படும்.

#3. தலையின் SCALP-ல் படியும்படி நன்றாகத் தேய்க்க வேண்டும். இதனால், SCALP-ல் உள்ள CELL-கள் ஆரோக்கியமாகி, முடி கொட்டுவதைத் தடுக்கிறது.

#4. அதிகப்படியான உடல் சூடு கூட சில நேரங்களில் முடி கொட்டுதலை அதிகப்படுத்தும். தேங்காய் எண்ணெய் அதைக் குறைக்கும்.

#5. உடலின் சூடு குறைவதால், இயல்பாகவே மற்ற பாகங்கள் ஒழுங்காக வேலை செய்யும். ஆரோக்கியம் மேம்படும்.

#6. DRY SKIN மற்றும் வலுக் குறைந்த தலைமுடி கொண்டவர்கள், தலைமுடி உதிரும் பிரச்சினை இருப்பவர்கள் இரவு படுக்கும் போதே தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுப் படுக்க வேண்டும்.

#7. ஆரோக்கியமான தலைமுடி கொண்டவர்கள், தலைமுடியைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தினமும் காலை குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, குளிக்க வேண்டும்.

#8. தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, SHAMPOO-களைப் பயன்படுத்துவது தவறு. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீயக்காய் போன்றவை கூடுதல் நன்மை தரும்.

#9. உணவில் சேர்த்துச் சாப்பிடும் போது, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

#10. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Coconut Butter BenefitsCoconut Oil Benefits  |  Coconut Farming  |  Tender Coconut Benefits  |  Coconuts & Worship  |

#NATURALREMEDY தேங்காய் எண்ணெய்யைக் கை, காலில் தேய்த்துவிட்டு பெயருக்குத் தலையின் மேற்பரப்பில்படும்படி தேய்ப்பது தவறான முறை. SCALP-ல் படுமாறு நன்றாகத் தேய்ப்பது, தலையின் உள்ளே எண்ணெய் ஊடுருவி, அதன் பணியை நன்கு செய்ய உதவும். பழக்கமான ஒன்றுதான், மீண்டும் செய்ய ஆரம்பிக்கலாமே!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top