#chrome dinosaur: Google டைனோசர் விளையாட்டில் அதிகபட்ச ஸ்கோர் எப்படி எடுக்கலாம்.? ஆனால் தப்பித் தவறியும் அத மட்டும் பண்ணக்கூடாது!
  • 19:01PM Nov 08,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 19:01PM Nov 08,2019 India

Google chrome Browser-யை பொறுத்தவரைக்கும் இன்டர்நெட் இணைப்பு கிடக்காவிட்டால் போதும், dinosaur ஓட ஆரம்பித்துவிடும். இன்டர்நெட் இல்லையே என்ற காரணத்துக்காக நாம் ப்ரௌசெரை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக தான் அந்த ஐடியா. சின்ன சின்ன விசயத்தில் கூட கூகுள் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் யோசித்து யோசித்து தான் ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தும். அப்படி கொண்டு வந்த chrome Browser dinosaur game-ல் அதிகபட்சமாக எவ்வளவு ஸ்கோர் எடுக்க முடியும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

ஆனால் அதனையும் ஹாக் செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா.? இதை செய்தே காட்டியிருக்கிறார்கள். அதற்கு முதலில் இன்டர்நெட் இணைப்பை ஆப் செய்யவும். பின்பு திரையில் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து மவுசின் வலது பக்க பட்டனை அழுத்தி Inspect எனும் ஆப்ஷனுக்கு செல்லவும். அதில் console டேப்பிற்கு செல்லவும். அதில் dinosaur செல்லும் வேகத்தை அதிகப்படுத்த Runner.instance_.setSpeed(1000) என்ற code-ஐ எடிட் செய்வதன் மூலம் மாற்றலாம்.

அடுத்து var original = Runner.prototype.gameOver Runner.prototype.gameOver = function(){} என்ற code-ஐ மாற்றுவதன் மூலம் எந்த தடைகள் மீதும் dinosaur மோதாமல் செல்லும். இதனால் விரைவாக அதிகபட்ச ஸ்கோரை எட்ட முடியும். சரி நான் எடுத்த வரைக்கும் இருக்கும் ஸ்கோரே போதும், ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்றால் Runner.prototype.gameOver = original என்று மாற்றினால், உங்கள் அதிகபட்ச ஸ்கோருடன் game முடிவுக்கு வரும்.

இந்த trick கணினிகளில் மட்டுமே வேலை செய்யும், ஆண்ட்ராய்டு போனில் வேலை செய்யாது. அதிகபட்சமாக இலட்சம் வரை கூட போகலாம். ஆனால் நீங்கள் விளையாட்டை ஹாக் செய்து தான், அந்த ஸ்கோர் வந்தது என்பதை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். நம் சக்திக்கு தகுந்தவாறு ஒரு சில ஆயிரங்கள் வரை அதிகபட்ச ஸ்கோர் எடுத்து வைத்துக்கொள்ளலாம். | VOGO: இனி 20 ரூபாய் இருந்தால் போதுமே சென்னையை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் - கையோட ஓட்டிகிட்டு போங்க!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top