Misc

சில உணவு பொருட்களில் இடம்பெற்றுள்ள பச்சை மற்றும் சிவப்பு டாட்களுக்கு என்ன அர்த்தம்?

Sep 13 2021 09:16:00 PM

நம்ம ஊரில் நிறைய மக்கள் நான் அசைவ பொருளை கையில் கூட தொட மாட்டேன் என்கிற பழக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்து வருகிறார்கள். இதெல்லாம் வாய் பேச்சுக்கு வேணும்னா சரியாய் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கே தெரியாமல் அசைவம் சம்மந்தமான பொருட்களை தினமும் சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்காங்க.

chocolate dot meaning

மளிகை கடைகளில் வாங்கும் நிறைய பொருட்களில் அசைவம் சம்மந்தமான பொருட்கள் கலந்துள்ளன. உதாரணத்துக்கு நம்ம ஒரு சாக்லேட் வாங்குறோம்னா அந்த கவரில் சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் ஒரு டாட் இருக்கும். அந்த டாட் எதுக்கு இருக்குன்னே தெரியாமல் நம்ம மக்கள் அந்த பொருட்களை வாங்கி சாப்பிடுவார்கள்.

chocolate dot meaning

கவரில் பச்சை நிறத்தில் டாட் இருந்தால் அது முழுக்க முழுக்க சைவ பொருட்களால் தயார் செய்துள்ள பொருள் என்று அர்த்தம். அதுவே அந்த பாக்கெட்டில் சிவப்பு நிறம் இருந்தால் அதில் கொஞ்சமாவது அசைவ பொருட்கள் கலந்துள்ளது என்று அர்த்தம். சில சாக்லேட்களில் கூட இந்த மாதிரியான சிவப்பு டாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இனியாவது சைவ உணவை விரும்பும் மக்கள் இதை தெளிவாக தெரிந்து கொண்டு வாங்கி சாப்பிடுவது நல்லது.

chocolate dot meaning