Lushgreen

சீனர்களை ஏன் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று உங்களுக்கு தெரியுமா? மற்றவர்களை காட்டிலும் இவங்க வித்தியாசமாக இருக்க என்ன காரணம்?

Jun 27 2021 10:32:00 AM

சீனர்களின் முக அமைப்பு அல்லது அவர்களின் தொழில் இதைப்பற்றி கூறவில்லை நண்பர்களே. அவர்களுடைய ஆளுமைத்திறன் மற்ற நாட்டவர்களை காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. எந்தத்துறையாக இருந்தாலும் அதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கே சவால் விடும் அளவுக்கு சீனர்களும் வளர்ச்சியடைந்து வருகின்றனர்.

chishi-bridge-china

அமெரிக்காவுக்கு நிகராக உயரமான கட்டிடங்களும், பாலங்களும் சீனாவிலும் உள்ளது. அமெரிக்காவுக்கு போட்டி என்றால் அது ரஷ்யா மட்டுமல்ல. சீனாவும் அந்த பட்டியலில் உள்ளது. சீனாவுக்கு சுற்றுலா சென்று வந்தவர்களை கேட்டால் இந்த உண்மையை புரிந்துகொள்ள முடியும்.

chishi-bridge-china

சிஷி பாலம் (Chishi Bridge) பற்றி சீனாவுக்கு சென்று வந்தவர்களிடம் கேட்டு பாருங்கள். ஒரு பெரிய கதையே கூறுவார்கள். சீனாவின் யிஷாங் கவுண்டியில் அமைந்துள்ள இந்தப் பாலம் உலகிலுள்ள மிகப்பெரிய பாலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. G76 ஜியாமென் செங்டு என்ற நெடுஞ்சாலையை இணைக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்ட இந்தப் பாலம் சுமார் 945 அடிகள் உயரத்தை கொண்டிருக்கிறது.

chishi-bridge-china

7450 அடி நீளம் கொண்டுள்ள இந்தப் பாலம் 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2016ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தை கட்டுவதற்காக சீனர்கள் சுமார் 300 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளனர். இந்த கட்டுமானத்திற்கு இவ்வளவு செலவு செய்துள்ள சீனர்கள் எப்படிப்பட்ட திறமைசாலிகள் என்று நான் சொல்லித்தான் இனிமேல் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை.