#BFFGoals நம்ம ப்ரண்ட்ஸ் கூப்டா கோவா கூட வரமாட்டாங்க... இந்தச் சீனா பொண்ணுங்க ஒண்ணா வீடே வாங்கிருக்காங்க!
  • 17:28PM Jul 06,2019 China
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:28PM Jul 06,2019 China

நாம் நமது நண்பர்களுடன் வளர்ந்ததும் பக்கத்துப் பக்கத்தில் வீடு வாங்கி ஒன்றாக வாழ்க்கை முழுதும் இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட கனவு கண்டிருப்போம். ஆனால் வளர்ந்த பிறகு ஒன்றாக டூர் போலாம் என்று சொன்னால் ஒருத்தரும் வரமாட்டார்கள். அவ்வளவு ஏன், இன்றும் ஏகப்பட்ட இளைஞர்களின் கனவு எப்படியாவது ஒன்றாகக் கோவா போகவேண்டும் என்பது தான். நாட்கள் ஓடஓட நண்பர்கள் ஒன்றாக இருப்போமா என்றுகூடத் தெரியாமல் ஓடிவிடும். ஒன்றாக ரோட்டில் அரட்டையடித்த நண்பர்கள் கூட வேலை, குடும்பம் என்று ஆகிவிட்டதும் பார்த்து பேசமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நமது நண்பர்களுடன் எப்படியாவது கோவா போகமுடியுமா என்று யோசித்து வரும் நமக்கு இந்தச் சீனா பெண்கள் செய்திருக்கும் காரியத்தைப் பற்றி அறிந்தால் நிச்சயம் வயித்தெரிச்சல் உண்டாகும்!

Jin Du என்ற சீனா பெண் தனது 6 தோழிகளுடன் ஒன்று சேர்ந்து வயதாகிய பின்பு தோழிகள் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும் என்பதற்காகச் சீனாவின் Guangzhou கிராமத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கியுள்ளனர். இவர்களின் திட்டப்படி, தங்களது குடும்பக் கடமைகள் அனைத்தும் முடிந்ததும், இந்த வீட்டிற்கு வந்து ஒன்றாக வாழவேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். முதலில் இது நடக்க வாய்ப்பிருக்குமா என்று குழப்பம் இருந்தாலும் தங்களது முடிவில் நிலையாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு Guangzhou கிராமத்தில் வயல் வெளிகளுக்கு நடுவில் சுமார் 7,535 சதுர மீட்டர் அளவுக்கு இடம் வாங்கி வீடு கட்டியுள்ளனர். தற்போது இவர்களின் குடும்பக் கடமைகள் முடிந்ததும் ஒன்றாகச் சேர்ந்து வாழவுள்ளனர். நமது நண்பர்கள் ஒன்றாக வெளியில் வரவே யோசிக்கும் நிலையில் இந்தப் பெண்களின் தடாலடி திட்டம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top