#start-ups : இன்னைக்கு இதுல தான் வேலையே - ஆரம்பித்த உடனே 7000 கோடிக்கு மேல் அள்ளும் நிறுவனங்களுக்கு என்ன பெயர் தெரியுமா.?
  • 16:18PM Oct 23,2019 China
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:18PM Oct 23,2019 China

தனியாருக்குச் சொந்தமான 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட  start-up நிறுவனங்கள் ‘unicorns’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை start-up நிறுவனங்கள் அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையில் இருந்தன. புதிய வேலை வாய்ப்புகள் பலவும் இந்நிறுவனங்கள் மூலம் அதிகம் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் 2019 ஜூன் மாத நிலவரப் படி, அதிக ‘unicorns’  start-up நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் முறையாக அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் மொத்தம் 494 ‘unicorns’ start-up நிறுவனங்கள் இப்போது இருக்கின்றன. அதில் சீனாவில் மட்டும் 206 நிறுவனங்கள் உள்ளன. அமெரிக்காவின் எண்ணிக்கை 203 மட்டுமே ஆகும்.

‘Hurun’ நிறுவனம் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள unicorns நிறுவனங்களில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமே 80 % ஆதிக்கத்தைக் கொண்டிருப்பதாக Hurun நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் Visual Capitals நிறுவனம் வெளியிட்டிருந்த பட்டியலில், வெறும் 94 ‘unicorns’ start-up நிறுவனங்கள் மட்டுமே சீனாவில் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

அப்போது அமெரிக்காவில் இருந்த ‘unicorns’ start-up நிறுவனங்களின் எண்ணிக்கை 156 மட்டுமே. தற்போது அதில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. இவ்வகை நிறுவனங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியாவில் செயல்பட்டு வரும் 'swiggy' நிறுவனமாகும். ஆரம்பிக்கப்பட்ட சிறிய கால இடைவெளிக்குள் 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட ‘unicorns’ start-up நிறுவனமாக உருவெடுத்துள்ளது. | Pranjal Patil: இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்த ஒரு மாற்றுத்திறனாளியின் வெற்றிப்பாதை!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top