Lushgreen

இவங்க ஊருல எல்லாத்துக்கும் இப்படித்தான் பேரு வைப்பாங்களோ? செம்ம உஷாரா எவ்வளவு பெரிய காரியம் செஞ்சு வச்சிருக்காங்க தெரியுமா?

Jun 26 2021 08:31:00 AM

என்னதான் ஆயிரம் வெட்டி வார்த்தைகள் பேசி கலாய்த்தாலும் சீனர்களின் திறமையை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். நாம் இங்கு ஒரு விஷயத்தை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த விஷயத்தை செய்து முடித்திருப்பார்கள் சீனர்கள். கொரோனா விஷயத்தை கூட உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதலில் சீனாவில் தான் பரவத்தொடங்கியது. ஆனால் இன்று உலகின் மற்ற நாடுகளில் இருக்கும் பாதிப்பின் அளவை விட சீனாவில் மிகக்குறைவாகவே உள்ளது.

china-peoples

சீனாவில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை கூட 100 கோடியை தாண்டி விட்டது என்று தகவல்கள் நமக்கு வருகின்றன. இப்படி பல விஷயங்களிலும் உஷாராக இருக்கும் சீனர்கள் அணை கட்டுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றனர். 858 அடி உயரம் கொண்ட உலகின் பெரிய அணைகளில் ஒன்றாக இருக்கும் நூஜாது அணை (Nuozhadu Dam) சீனாவில் தான் உள்ளது.

china-peoples

இந்தப் பெயருக்கு நமக்கு விளக்கம் தெரியவில்லை. இந்த அணையின் மொத்த நீளம் 1995 அடிகளாக இருக்கிறது. சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள லான்காங் என்ற ஆற்றின் மீது இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்தியை பிரதானமாகக் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. இதிலுள்ள 9 ஜெனெரேட்டர்களும் தலா 650 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுடன் வடிவைமைக்கப்பட்டுள்ளது.

china-peoples

மொத்தம் 5850 மெகாவாட் மின்சாரம் இந்த அணையின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அணையின் கட்டுமானப்பணிகள் 8 ஆண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு நிறைவு பெற்றது. அதன் பின்னர் பயன்பாட்டுக்கு வந்த நூஜாது அணை உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.