Exquisite

எந்த மணமகனுக்கும் இப்படி ஒன்று நடக்கவே கூடாது ! யாரும் எதிர்பார்த்திராத சம்பவத்தால் திக்குமுக்காடிய மணமேடை

Apr 09 2021 09:46:00 PM

உலகில் ஒவ்வொரு நாளும் பல விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சீனாவின் பீஜிங்கில் அரங்கேறிய திருமண வைபவம் சினிமாவில் வருவது போல பல திருப்பங்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. எங்கே திருமணம் நடைபெறாமல் போய்விடுமோ என்று அனைவரும் குழப்பத்தில் இருந்த போதிலும் இறுதியில் ஒரு வழியாக திருமணம் சுபமாக நடைபெற்றது.

china-marriage

திருமணத்திற்கு சிறிது நேரம் முன்பாக மணமகன், மணமகள் இருவரும் சகோதர சகோதரி என்ற அதிர்ச்சியான உண்மை வெளியானதுமணமகனின் தயார் 20 வருடங்களுக்கு முன்னர் தனது பெண் குழந்தையை தொலைத்து விட்டார். அவரை வேறு ஒரு தம்பதியினர் எடுத்து வளர்த்து வந்துள்ளனர். மணமேடையில் தான் இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளனர். மணமகளின் உடலில் ஏதோ ஒரு அடையாளத்தை கண்ட மணமகனின் தாயார் உடனே விரைந்து சென்று மணமகளின் வளர்ப்பு தாய் தந்தையரிடம் இது பற்றி கேட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

china-marriage

தனது திருமண நிகழ்ச்சியில் தனது உண்மையான தாயை கண்டு கண்ணீர் மல்க கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மணமகள். ஆசையாய் கரம் பிடிக்கலாம் என்று இருந்த மணமகன் இந்த சம்பவத்தால் திடுக்கிட்டார். திருமணம் செய்யப்போகும் சமயத்தில் மணமகள் சகோதரியாகி விட்டாரே என அவர் கலங்கி நின்ற சமயத்தில் மேலும் ஒரு திருப்பமாக திருமணத்தை நிறுத்தாமல் நடத்தி வைத்து விட்டார் மணமகனின் தாயார். இப்படி ஒரு திருமணமா என்று பயப்பட வேண்டாம். மணமகன் அவரது தாயாருக்கு வளர்ப்பு மகன். மகள் தொலைந்த சோகத்தில் இவரை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். எனவே தன்னுடைய வளர்ப்பு மகனுக்கும், வயிற்றில் பிறந்த சொந்த மகளுக்கும் திருமணம் நடைபெறுவதில் எந்த தவறும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார் அவர். மொத்தத்தில் மணமக்கள் இருவருக்கும் தாயார் ஒருவர் தான். இந்த ருசிகர திருமணத்தை விருந்தினர்கள் பலரும் உணர்ச்சி பெருக்கோடு கண்டுகளித்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.