Lushgreen

அரிசியால் செய்த உணவை சாப்பிட்டால் உடல் குண்டாகி விடும் என்று சொல்கிறார்களே! தினமும் அரிசியை மட்டும் அதிகம் சாப்பிடும் சீனா, ஜப்பான்காரர்களின் உடல் அழகின் ரகசியம் என்ன?

Jun 18 2021 09:43:00 PM

அரிசி தான் நம் தமிழக மக்களின் அன்றாட உணவு. தினமும் அரிசியால் செய்த உணவை சாப்பிடுவதால் மக்கள் சுகர், கொலஸ்ட்ரால் போன்ற நிறைய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பரவலாக இருக்கிறது. குக்கரில் சேமித்து வைத்த உணவை சாப்பிடுவதால் தான் இப்படி நிறைய பிரச்சனைகள் வருகின்றன என்றும் சொல்கிறார்கள்.

china japan people

சரி அரிசி தான் பிரச்சனை என்றால் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் அரிசியால் செய்த உணவைத்தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். அவர்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். நம் முன்னோர்கள் கூட தினமும் அரிசியால் செய்த உணவைத்தான் சாப்பிட்டு வந்தார்கள். அவர்களுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை. அப்புறம் ஏன் இந்த கால மக்களுக்கு மட்டும் இப்படி ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன?

china japan people

நம் முன்னோர்களும், சீனா, ஜப்பான் போன்ற நாட்டை சேர்ந்த மக்களும் எப்போதும் தாங்கள் சாப்பிட்ட உணவிற்கேட்ப வேலை செய்துவந்தார்கள். எவ்வளவு சாப்பிடுகிறார்களோ அதைவிட அதிகமாக உடலுக்கு வேலை கொடுத்து வந்ததால் அவர்கள் அழகுடனும்,ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாம் தான் எந்த வேலையும் செய்யாமல் சாப்பிட்டு விட்டு அது ஜீரணம் ஆகாமல் நோ ய்களால் பாதிக்கப்படுகிறோம் என்று ம ருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே எவ்வளவு சாப்பிடுகிறோமோ அதற்கேட்ப வேலை செய்துவந்தால் உடல் ஆரோக்கியமாகவும், தொப்பை குறைந்து ஸ்லிம்மாகவும் இருக்கலாம்.

china japan people