Lushgreen

இது எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியல! அந்த நாட்டுக்கறாங்க செயற்கை சூரியனையே தயாரித்து விட்டார்களாம்!

Jun 19 2021 08:46:00 PM

கம்யூனிசம் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் நம் இந்தியாவில் பரவி வருகிறது. அதனால் இங்கே கம்யூனிசம் தலைதூக்க முடியவில்லை. இன்னமும் நாமெல்லாம் ஒரு தடுப்பூசிக்காக வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்கும் சூழ்நிலையில் தான் நம்ம நாடு உள்ளது. நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அப்துல் கலாம் சொன்னதைப்போல இந்தியா முன்னேற்றத்துக்காக கனவு காணாமல் PUBG, freefire விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

china artificial sun

டூப்ளிகேட் பொருட்கள் தயாரிப்பதில் சீனா தான் உலக நாடுகளுக்கு முன்னோடி. இப்போ அவங்க என்ன பொருள் தயாரித்துள்ளார்கள் தெரியுமா? செயற்கை சூரியனை சீனாகாரர்கள் தயாரித்துள்ளனர். பெயருக்கு மட்டும் தான் இது செயற்கை சூரியன். ஆனால் சூரியனைப்போன்று அதே அளவு வெப்பநிலையை தரக்கூடிய அமைப்பாக இந்த செயற்கை சூரியனை தயாரித்துள்ளனர்.

china artificial sun

பூமியின் மையப்பகுதியில் இருந்து வெப்பத்தை எடுத்து செயற்கையான முறையில் சூரியனை உருவாக்கியுள்ளனர். கடந்த மாதம் வெறும் 20 நொடிகள் மட்டுமே இயக்கி இதன் செயலை பார்வையிட்டனர். உலகில் உள்ள பல நாடுகளும் இந்த முயற்சியில் உதவி செய்துள்ளன. இந்த செயற்கை சூரியன் மூலம் எரிபொருளை உண்டாக்கி மின்சாரத்துக்கு பயன்படுத்தப்போகிறார்கள். உலகிலேயே சுற்றுப்புறத்தை பாதிக்காமல் எரிபொருள் தயாரிக்கும் முறையும் இதுவாகத்தான் இருக்கும். இந்த செயற்கை சூரியன் மூலம் எரிபொருள், மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் நடைமுறைக்கு வந்தால் சீனா தான் உலகிலேயே பொருளாதாரத்தில் வளம் பெரும் நாடாக மாறும் என்றும் சொல்லப்படுகிறது.

china artificial sun