#childlessness: திருமணமாகி ஒருவருடம் ஆனபின்னரும் குழந்தை இல்லையனில் அந்த பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும் ?
  • 10:50AM Jun 02,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 10:50AM Jun 02,2020 Chennai

நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சுற்றத்தின் திணிப்பால் தான் நடக்கிறது என்பதை ஆழமாக சிந்தித்தால் உங்களுக்கு புரியக்கூடும். உதாரணத்திற்க்கு யாரும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்றாற் போல வாழ்வது அரிதே, குழந்தை பிறந்தது முதல் அந்த குழந்தை பெரியவனாகி அவருக்கு ஒரு குழந்தை   பிறந்து ஆளாகும் வரை நடப்பது எல்லாமே யாரோ ஒருவரின் திணிப்பால் தான் என்றால் நம்ப முடிகிறதா? பள்ளி பருவத்தில் பொது தேர்வில் உன் மகன் என்ன மதிப்பெண், பையனை எந்த காலேஜில் சேர்த்து இருக்கிறீங்க, படிப்பு முடிந்து வேலை கிடைத்தாயிற்றா, வேலை கிடைத்தும் இவ்ளோ வயதாகி திருமணம் ஆகவில்லையா? திருமணம் ஆகியும் விசேஷம் இல்லையா? இன்னும் தொடரும் கேள்விகளை கடந்து தான் நாம் ஒவ்வொருவரும் வந்திருப்போம்.

ஒரு சிலர் இதில் பாதி கிணற்றை தாண்டியிருப்பார்கள்.ஆனால் கண்டிப்பாக இது போன்றவற்றை கடந்து வந்தே ஆக வேண்டும் என்பதே நிதர்சனம்.இந்த கேள்விகளை எழுப்பும் சமூகத்தின் ஏதோ ஒரு தேவைக்கு ஆசைப்பட்டு நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.இந்த ஓட்டத்தில் ஒரு சில நிகழ்வுகளை எளிதில் கடந்து செல்ல முடியாமல் பெண்கள் ஒரு கட்டத்திலே நின்று விடுகிறார்கள்.உதாரணத்திற்க்கு  புதுமண தம்பதிகளுக்கு குழந்தை இல்லையெனில்,  ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கலாம் அல்லது  அடுத்தவருடம் பிறக்கலாம். 

ஆனால் நம்மை சுற்றியுள்ள உறவுகள் திருமணம் ஆன முதல் இரண்டு மாதத்திலே  ஏதும் விசேஷம் உண்டா? என ஆரம்பிப்பார்கள். அடுத்து ஆறாவது மாதத்தில் ஏதாவது நல்ல டாக்டரை பார்க்கலாம்ல என்பார்கள். பத்தாம் மாதத்தில் ஏன் யாருக்கு பிரச்சனை இருவரும் செக்கப் செய்துபார்த்துக்கோங்க என்பார்கள்.அதுவும் ஒரு வருடம் ஆகியும் நல்ல செய்தி இல்லையென்றால் , குழந்தை வரம் தரும் கடவுள்களை பார்த்து பார்த்து  கும்பிட சொல்லி ஒரு கூட்டம் கிளம்பும். இது போன்ற பல கேள்விகளை எளிதாக சமாளித்து கடக்க கற்றுக்கொள்கிறார்கள் பெண்கள்.ஆணுக்கு இந்த பிரச்சனை இல்லையா என்றால்? அவர்களுக்கும் இது போன்ற சூழல் நிகழகூடும்..ஆனால் திருமணமான பெண் தான் அம்மாவாகும் வரை ஒவ்வொரு நிமிடமும் இந்த வேதனையை அனுபவித்தே ஆகவேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top