3 மாத குழந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற சைக்கோ தந்தை
  • 12:26PM Mar 15,2019 Tiruvannamalai
  • Written By DURAIMURUGAN
  • Written By DURAIMURUGAN
  • 12:26PM Mar 15,2019 Tiruvannamalai

3 மாத குழந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற சைக்கோ தந்தை

 

மனிதன் மிருகமாக மாறிவருகிறானோ என்று என்னத்தோன்றும் அளவிற்கு ஒரு சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தில் நடந்துள்ளது

Murder3_647_1.jpeg

காம்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்,இவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சார்ந்த இராஜேஸ்வரி என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றுளது,இந்த தம்பதிக்கு ஏற்கனேவே குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் பிறந்த 3 மாத கைக்குழந்தை உள்ளது,

 

இரவு கடையை அடைத்து விட்டு கார்த்திகேயன் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது அவரது மனைவி , தந்தை ,மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

aylan_647_091915101215.jpg

அப்போது  இராஜேஸ்வரிக்கு  அரிவாள் மூலமாக யாரோ எதையோ வெட்டுவது போல சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்துள்ளார் ,கார்த்திகேயன் அவரது சொந்த மகனை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டிக்கொண்டு இருப்பதை கண்டு அலறினார்.

 

உடனடியாக  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,விசாரணையில்  கார்த்திகேயன்  மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுதெரியவந்துள்ளது.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top