Highrise

அழிவுக்கு பின்னாடி இப்படி ஒரு ஆப்பு இருக்கிறதா? சாதாரண கோழியிடம் சிக்கிக்கொண்டு சப்பையாகிப்போன ஹவாய் தீவு மக்கள்!

Oct 05 2021 05:27:00 PM

கோழியின் மூலம் பெருசா என்னங்க ஆபத்து வந்துவிடப்போகிறது என்று நீங்க நினைக்கலாம். நாம் சாதாரணமானது என்று நினைக்கும் கோழி கூட மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் திறன் கொண்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று பெரியோர்கள் கூறுவர். அந்தப்பழமொழியை இந்த கோழிகள் காதில் கேட்டிருக்கும் போலத்தெரிகிறது. அதனால் தான் ஒரு தீவையே ஆக்கிரமித்து மக்களுக்கு பல்வேறு இன்னல்களை தந்துகொண்டிருக்கிறது.

chicken-island-hawaii

1992ம் ஆண்டில் ஒரு பயங்கரமான புயல் வீசியதால் ஹவாயில் இருக்கும் கவாய் தீவு பலத்த சேதமடைந்தது. அதில் அங்கிருந்த கோழிப்பண்ணைகள் எல்லாம் அழிந்துபோனது. இருப்பினும் ஒரு சில கோழிகள் அந்த பேராபத்திலிருந்து தப்பித்துக்கொண்டன. தப்பிய ஒரு சில கோழிகள் காட்டுக்குள் தஞ்சம் புகுந்து அங்கு படிப்படியாக வாழத்தொடங்கியது.

chicken-island-hawaii

நாளடைவில் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய கோழிகள் தங்களுடைய ராஜ்ஜியத்தை அந்த தீவில் நிலைநாட்ட விரும்பியது. ஹவாய் பகுதியில் இருக்கும் ஒரு தீவில் ஏராளமான கோழிகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே அந்த தீவுக்கு சிக்கன் தீவு என்ற பெயர் ஏற்பட்டது. ஹவாயில் கடல் உணவுகளுக்கு இணையாக சிக்கன் உணவுகளும் கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

chicken-island-hawaii

கோழிகள் மக்களுக்கு பல வழிகளில் தொந்தரவு தந்துகொண்டிருக்கிறது. கிராமத்தில் கோழி வளர்ப்பவர்களுக்கு அது செய்யும் சேட்டைகள் எல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறன். இந்த தீவின் சாலைகளில் ஏராளமான கோழிகள் அடிக்கடி நடமாடிக்கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் கவனமாகத்தான் சாலையில் பயணிக்க வேண்டும். காடுகளில் இருக்கும் கடுமையான சூழலில் இந்த கோழிகள் தாக்குப்பிடித்து வாழ்வதை கற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயமாகும். புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவில் இருந்து தப்பிய கோழிகள் இப்போது மனிதர்களுக்கு பல்வேறு ஆச்சர்யங்களை அளித்து வருவதால் சிக்கன் தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதை ஒரு அதிசயமாகவே பார்த்து வருகின்றனர்.