பெற்றோர்கள் கவனத்திற்கு...
  • 09:24AM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 09:24AM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

குழந்தைகள் கடவுள் தந்த வரம்.குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை.இன்று உள்ள நாகரீகம் என்று போர்வை போட்டுக்கொண்டு பலரும் பிறருக்காக வாழ்ந்து வருகின்றனர்.இதிலும் கொடுமை குழந்தைகளை வளர்ப்பதிற்கே சோம்பேறித் தனம் பட்டுக்கொண்டு அவர்களைக் குழந்தைகள் பராமரிக்கும்(day care) சில இடங்களில் சேர்த்து விடுகின்றனர்.நம்முடைய அம்மா காலத்தில் இல்லாத இந்தப் பழக்கம் திடீரென்று அதிகரித்துள்ளது.குழந்தைகள் நல்ல வழியில் வளர்ப்பதற்குச் சில வழிகள்..

Image result for parental articles

பொதுவாக நாம் நம்முடைய குழந்தையின் சந்தோஷத்திற்காக நாம் பல பொய்களைச் சொல்வோம்.இது தவறில்லை ஆனால் அதே சமயம் குழந்தையிடம் இருப்பதைப் பக்குவமாகச் சொல்லுவதால் அவர்களுக்கு எது சரி என்பதை உணரும் பக்குவத்தை அடைவார்கள்.

Image result for father and son

குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே மற்றவர்களிடம் அணுகும் முறையைப் பழக்கிவைத்தல் நல்லது.இதை மிரட்டி வரவைப்பதை விட அன்பால் புரியவைப்பதே அவர்கள் மனதில் ஆழமாகப் பதியும்.

குழந்தைகளின் உலகம் மிகப் பெரியது.அவற்றைப் பெற்றோர்கள் வரைமுறை படுத்த வேண்டாம்.இன்று உள்ள பல பெற்றோர்கள் செய்வது இந்தக் காரியத்தைத் தான் மற்ற குழந்தைகளைப் போல் இருக்க வேண்டும் என்று குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறித்து விடுகின்றனர்.குழந்தைகளுக்கென்று ஒரு உலகம் இருப்பதை மறந்து விடுகின்றனர்.குழந்தைகளை அவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றாற் போல் செயல் பட வேண்டும்.

Image result for father and son

குழந்தைகளுக்கு எப்பொழுதுமே அவர்கள் பெற்றோர்கள் தான் முதல் ஹீரோ.பெற்றோர்களைப் பார்த்துக் குழந்தைகள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளுவார்கள்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அருகில் இருக்கும் போது எப்படி இருக்கிறார்களோ அதைப் பார்த்து தான் குழந்தைகள் நடந்துகொள்ளும்.குழந்தைகள் அருகில் இருக்கும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top