மாற்றமே முன்னேற்றம்!
  • 07:30AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 07:30AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாம் தினம் தினம் பேருந்தில் செல்லும்பொழுதும்,சில திருவிழாக்களிலும் பாசிமணிகள்,ஹேர்பின் போன்றவற்றை விற்கும் சிறுவர்களைப் பார்த்திருப்போம்.,இவர்கள் நிலமை மாறாத? என்று கூட யோசித்து இருப்போம்..ஆனால் அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் இன்று குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளான் என்று கேட்டல் நமக்கு ஆச்சர்யமாகத்தானே உள்ளது.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாடோடி பழங்குடியினரை சேர்ந்தவன் சக்தி என்ற சிறுவன்..வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தச் சிறுவனின்  வாழ்க்கை போராட்டம் அவனது  சிறு வயதில் இருந்தே தொடங்கிவிட்டது.பள்ளிக்குச் செல்ல விரும்பிய இவனது கனவு அவனது பள்ளி ஆசிரியர்களாலும்,சக மாணவர்களாலும் கலைக்கப்பட்டது..அவனது உடை,வாழ்க்கைமுறை பற்றி ஏளனம் படுத்தப்பட்டதும் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டான்.கல்வியைத் துறந்தபின் தான் தாய் தந்தையுடன் மணிகள் விற்கச் சென்றுவிட்டான்.

கல்வி கற்கவேண்டும் என்னும் எண்ணம் மட்டும்  இந்தச் சிறுவனின் மனதிற்குள் ஒரு ஆசையாக இருந்து உள்ளது..இதற்கு கை கொடுக்கும் வகையாக,"ஹன்ட் இன் ஹன்ட்" என்னும் அரசு சாரா அமைப்பு இவனைக் கண்டறிந்து உள்ளது.இவனையும் இவனைப் போன்ற மற்ற சிறுவர்களையும் பாரதியார் பள்ளியில் சேர்த்து சிறுவர்களுக்கு அடிப்படை பழக்கவழக்கங்களையும்  மற்றவற்றையும் சொல்லி கொடுத்துள்ளனர்.பின்பு அரசாங்கத்தின் சர்வ சிக்ஷா அபியான் திட்டம் கீழ் இவர்களைப் பள்ளி விடுதியில் தங்கவைத்து படிக்கவைக்கின்றனர்..கல்வி மேல் நல்ல ஆர்வம் கொண்ட இவன் நன்றாக படிக்கத் தொடங்கினான். விடுமுறை நாட்கள் வந்தபின் தன் ஊர்க்குச் சென்ற இவனைப் பார்த்த அங்குள்ள சிறுவர்கள் இவனிடம் உள்ள மாற்றத்தைக் கண்டு வியந்துள்ளனர்..

அவனிடம் இருந்த மாற்றத்தை அவர்கள் பார்த்து வியந்ததைக் கவனித்த அவன்,அவர்களையும் தன்னைப்போல் கல்வி கற்றல் அவர்களிடமும் மாற்றம் உண்டாகும் என்று எண்ணி அவர்களைப் பள்ளியில் சேரவைக்க முயற்சி செய்தேன்..அவன் முயற்சித்ததில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியுள்ளனர். 12 வயதில் தன்னைப்போல் தன்னுடன் இருந்த மற்றவர்களிடமும் மாற்றம் கொண்டுவர எண்ணிய இவனின் எண்ணத்தை எண்ணி,இந்த ஹன்ட் இன் ஹன்ட் அமைப்பின் இணை நிறுவனர் திருமதி கல்பனா சங்கர் குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதுக்காக இவனை பரிந்துரை  செய்துள்ளார்.இவனைப்போல் உலகளவில் 169 சிறுவர்கள் இந்த விருதுக்காகப் பல அமைப்பினால் பரிந்துரைக்க பட்டுள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top