Rainforest

உன்னால் முடியும் வாடா தோழா! நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமே இனி எந்த பாதையும் உனக்கு தடையில்லை

Apr 18 2021 07:34:00 PM

14-வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வெற்றி பெரும் முனைப்பில் மிக கவனமாக போட்டிகளை எதிர்கொள்கிறது. பல இளம் வீரர்கள் எல்லா அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டால் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயம் இடம் பிடிக்க முடியும்.

chakaria-rajasthan

பும்ரா, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ரிஷாப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற பல வீரர்கள் ஐபிஎல் போட்டியில் ஜொலித்து இந்திய அணியில் இடம்பிடித்தனர். சமீபத்தில் கூட நடராஜன், கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாயினர். இந்த வரிசையில் இடம்பிடிக்க மிகுந்த உத்வேகத்துடன் காத்திருக்கிறார் ராஜஸ்தான் அணியின் சேத்தன் சக்காரியா.

chakaria-rajasthan

இடது கை வேகப்பந்து வீச்சாளரான சக்காரியா ஐபிஎல் தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 23 வயதாகும் இளம் வீரரான இவர் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். லாரி டிரைவராக இருக்கும் அவரது அப்பா சமீபத்தில்  ஒரு விபத்தில் சிக்கி படுக்கையில் உள்ளார். அவரது தம்பி ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார். ஷூ வாங்குவதற்கு கூட கஷ்டப்பட்ட சக்காரியா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியால் 1.20 கோடி ரூபாய்க்கு  ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை பட்டை தீட்டினால் நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச்சிறந்த பந்துவீச்சாளராக மாறுவார் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை