Misc

எதுக்கும் உதவாத இந்த பொருளுக்கு எதுக்குடா இவ்வளவு காசு? பொழுது போகலான உருப்படியா வேற ஏதாவது பண்ணலாம்ல!

May 01 2021 09:48:00 AM

பொழுதுபோக்கிற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு காசை பற்றியெல்லாம் கவலை கிடையாது. அவர்களிடம் தான் காசு மலைபோல குவிந்து கிடக்கிறதே. அப்புறம் என்ன அவங்களுக்கு பிரச்சனை? காசை பற்றி நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கத்து மக்கள் மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

chair-handbag

சமீபத்தில் ட்விட்டரில் போட்டிருந்த ஒரு பதிவை கேட்டு நொந்து போய்விட்டேன். காரணம் அந்தப்பதிவில் இடம்பெற்றுள்ள ஒரு சின்ன ஹேண்ட்பேக். இதுல அப்புடி என்ன இருக்குனு அதைப்பற்றி படிக்க ஆரம்பித்தேன். சேர் போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஹேண்ட்பேக்கின் விலை 895 அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் சுமார் 66,794 ரூபாய். லெக்சி பிரௌன் என்ற பெண் ஒருவர் இந்த வித்தியாசமான ஹேண்ட்பேக்கை இவ்வளவு விலை கொடுத்து ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

chair-handbag

இந்த தகவலை குறிப்பிட்ட அந்த பெண் இதுபோன்ற வித்தியாசமான பொருட்களை சேர்ப்பது தனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார். சரி இவ்வளவு காஸ்டிலி பேக்காக இருக்குதே அதனுடைய சிறப்பம்சம் என்னவென்று பார்த்தால் அதில் அப்படி எதுவுமே இல்லை. வெறும் டம்மி ஹேண்ட்பேக்கின் விலை 67 ஆயிரம் ரூபாய். அதில் எந்த பொருளையும் வைக்க கூட முடியாது. இதெல்லாம் எவ்வளவு கொடுமை பார்த்தீங்களா.