#LADIESHOSTEL: WORKING WOMEN-க்கான HOSTEL அமைக்க நிதி வழங்கும் மத்திய அரசு!!! கேட்க மறுக்கும் தமிழக அரசு!!!
  • 13:40PM Nov 08,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 13:40PM Nov 08,2019 Chennai

சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் MANSION-கள் எனப்படும் PRIVATE HOSTEL-களில்தான் தங்குகின்றனர். ஒரு சிலர் மட்டுமே வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் பெண்கள் தங்கும் PRIVATE HOSTEL-களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு PRIVATE HOSTEL-ன் பெண்கள் குளியலறையில் SECRET CAMERA பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து LADIES HOSTEL-களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது சென்னையில் உள்ள பல்வேறு HOSTEL-கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு, WORKING WOMEN-க்கான LADIES HOSTEL-ஐ அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு சார்பில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 28 HOSTEL-கள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மாத ஊதியம் ரூபாய் இருபந்தைந்தாயிரத்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் மாத ஊதியம் ரூபாய் பதினைந்தாயிரத்திற்குள்ளும் பெறும் WORKING WOMEN-கள் இந்த HOSTEL-களில் சேர்ந்து பயன் பெறலாம்.  சென்னையில் மாதமொன்றுக்கு ரூ.300-ம், இதர மாவட்டங்களில் மாதமொன்றுக்கு ரூ.200-ம் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், WORKING WOMEN-களுக்கான புதிய HOSTEL-கள் கட்ட மத்திய அரசு வழங்கும் நிதி உதவியைப் பெறக் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 2016 - 2017 FINANCIAL YEAR-ல் 7 மாநிலங்கள் நிதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இதில் 2 மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. 2017 – 2018-ம் FINANCIAL YEAR-ல் 4 மாநிலங்கள் நிதி கோரி விண்ணப்பித்துள்ளன.  இந்த 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. 2018 – 2019-ம் FINANCIAL YEAR-ல் 4 மாநிலங்கள் நிதி கோரி மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளன. இதில் 2 மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த 3 ஆண்டுகளில் WORKING WOMEN-களுக்கான LADIES HOSTEL அமைக்க நிதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. PRIVATE HOSTEL-களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழக அரசின் இந்தச் செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய சொல்வதை மட்டும்தான் தமிழக அரச செய்யும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மேலுளம் வலுப்படுத்துவதாகவே இது இருக்கிறது. மக்கள் மீது தமிழக அரச கொஞ்சமாவது அக்கறை காட்டுமா???

Women Enterpreneur  |  Women After Marriage  |  Avoiding Co-Workers  |  Home Work Out  |  Vishaka Committee  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top