நீதித்துறையும் நிறம் மாறியதா?
  • 11:24AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:24AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

     2G தீர்ப்பு ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு??? என்று ஏற்கெனவே இந்த இணையத்தில் நான் பதிவிட்டிருந்த கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்டிருந்த விஷயத்திற்குப் பதிலாக வரும் 21 ம் தேதி, RK நகர் தேர்தல் நாளன்று 2G தீர்ப்பு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மேலோட்டமாகப் பார்க்கும் போது வெகு சாதாரணமாகத் தோன்றும் இந்த விஷயம், கண்டிப்பாக சில கேள்விகளை எழுப்பாமல் இல்லை.  கேள்விகளை விடவும் முக்கியமான ஒரு விஷயம், தமிழ்நாடே RK நகர் தேர்தலை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் எதற்காக இந்தத் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும்.

       வேடிக்கை என்னவென்றால், இது சாதாரண நீதிமன்றம் கூடக் கிடையாது, சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.  இதில் என்ன பிரச்சினை என்பதைப் பார்க்கும் முன் RK நகரில் இருக்கும் சூழ்நிலையைச் சற்று கவனித்துவிட்டு வருவோம்.  இலைக் கட்சிக்கு நிரந்தர வாக்காளர்கள் 32 சதவீதம், அதே சூரியக் கட்சிக்கு 28.5 – 29 சதவீதம்.  இலைக்கட்சிக்கு உள்ள 32 சதவீதம் தினகரன், EPS தரப்பு என்று இரண்டாகப் பிரியும்.  தினகரன் 2 அல்லது 3 சதவீதம் வாக்குகளைப் பிரித்தாலே போதும் அதிமுக நிச்சயம் தோற்று விடும்.  ஆனால் திமுகவின் நிலையோ அதுவல்ல.  ஏற்கெனவே இருக்கும் சதவீதத்துடன் இதர கட்சிகளின் வாக்குகள் என அனைத்தும் சேர்ந்து பெரிய வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டிவிட முடியும்.

       அதற்காகக் குறி வைத்து இந்தத் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.  ஒரு வாரத்திற்கு முன் பிரச்சாரத்தை முடித்து விட வேண்டும்.  பிறகு மக்கள் சிந்தித்து தேர்தல் நாளன்று வாக்களிப்பார்கள் என்பது நடைமுறை.  வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் திமுகவிற்கு எதிரான ஒரு விஷயம், தேர்தல் நாளன்று காலை முதல் ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருப்பது நிச்சயம் ஆளுங்கட்சிக்குச் சாதமான ஒரு செயல்தான்.  தீர்ப்பு பற்றி கவலையில்லை, ஆனால் தள்ளிப் போட்டாலும் கூட அன்றைய தினம் மக்களைக் குழப்புவதற்கு இது பயன்படும் என்பது தேர்தல் ஆணையம் அல்லது சிபிஐ நீதிமன்றத்திற்குத் தெரியாதா?  இதுதான் உண்மையான நடுநிலைமையா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top