Exquisite

பூனையை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் அதே கூட்டம் அதை எவ்வளவு கேவலமாக நடத்துகிறது தெரியுமா? இப்படி ஒரு கன்றாவியான பழக்கம் எங்கிருந்து வந்திருக்கும்?

Sep 23 2021 04:27:00 PM

பெரும்பாலான மக்கள் வீட்டில் பூனை அல்லது நாய் இரண்டில் ஒன்றை மட்டுமே செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆசைப்படுவாங்க. அதுல எந்த தப்பும் இல்ல. ஆனா அதே மக்கள் பூனையை அபசகுணமாக பார்ப்பதும் நடைமுறையில் உள்ளது. இந்த பழக்கத்தை மூட நம்பிக்கை என்று சொல்வதை விட முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

cat-crossing-road

நான் எதைப்பத்தி சொல்லப்போகிறேன் என்று ஓரளவுக்கு யூகித்திருப்பீங்க. ஒரு நாள் ரோட்டுல நடந்து போகும் போது கருப்பு நிற பூனை ஒன்று குறுக்கே சென்றது. என் கூட வந்த இன்னொருவர் அதைப்பார்த்துவிட்டு பூனை குறுக்க போகுது. போகுற காரியம் விளங்காதுப்பா என்று கூறினார். இது என்னடா பைத்தியக்காரத்தனம் என்று எனக்கு தோன்றியது. ஏனெனில் எனக்கு அன்றைய நாளில் அப்படி எந்த கெடுதலும் நடக்கவில்லை.

cat-crossing-road

பூனை அதனோட பாதையில் செல்கிறது. நாம் நம்முடைய பாதையில் செல்கிறோம். இதுல என்ன அபசகுணம் இருக்கு சொல்லுங்க. அதிலும் ஒரு சில மேதாவிகள் கருப்பு பூனை மட்டும் தான் அபசகுணம் காட்டும். வேற கலரு பூனை குறுக்கே சென்றால் பாதிப்பில்லை என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இடமிருந்து வலமாக சென்றால் கணக்கில்லை. வலமிருந்து இடமாகத்தான் பூனை நம்மை கடந்து செல்லக்கூடாது என்று கூறுவாங்க.

cat-crossing-road

இந்த மட்டமான பழக்கம் நம்ம நாட்டுல மட்டும் தான் இருக்குது என்று வருத்தப்பட தேவையில்லை. ஒரு சில மேற்கத்திய நாடுகளில் கூட பூனை சகுனம் பார்க்கும் நடைமுறை உள்ளது. எகிப்து நாட்டில் இந்த பழக்கம் முதன் முதலாக நடைமுறைக்கு வந்ததாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

cat-crossing-road

எங்கிருந்து வந்தால் என்ன? இந்த விஷயத்தை செய்யும்போது உங்க பகுத்தறிவு கொஞ்சமாவது உங்களுக்கு கைகொடுக்க வேண்டாமா? படித்த மனிதர்கள் கூட இந்த பழக்கத்தை எந்த கேள்வியும் கேட்காமல் கடைபிடிப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும். நீங்க பூனையை அபசகுணம் என்று நினைக்கிற மாதிரி பூனை மனசுக்குள்ள உங்கள பார்த்ததை அபசகுணமாக நினைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை ஒருவரும் மறந்து விடக்கூடாது. இது போன்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளில் இருந்து வெளியே வாங்க. இந்த நவீன யுகத்தில் இப்படியெல்லாம் யோசிக்கலாமா?