ஹேக்கர்கள் குறி வைக்கும் புதிய துறை…
  • 12:40PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:40PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India

கப்பல்துறை… ஆம், தற்போது ஹேக்கர்கள் வங்கி லாக்கர்கள், டேட்டா திருட்டு அனைத்தையும் தாண்டி கப்பல்துறையை குறி வைத்துத் தாக்கத் துவங்கிவிட்டனர். காரணம் ஒரு சரக்குக் கப்பலில் பயணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் அதன் குறைந்த பாதுகாப்பு கட்டமைப்பு.  பணம் நேரடியாகப் புழங்கும் இடங்களில் பாதுகாப்பு கட்டமைப்பு மிக அதிகமாக இருக்கும் காரணத்தால், கிட்டத்தட்ட அதே அளவு பணம் ஆனால் சுலபமான வழிகள் என்று சற்று அஜாக்கிரதையாக இருந்த கப்பல் துறையைத் திணற அடிக்கின்றனர்.

இணையப் பாதுகாப்பு நிறுவனமான சைபர் கீல் ஒரு கப்பலின் மின்னஞ்சல் பதிவுகளை கவனித்த போது இந்த உண்மை வெளியில் வந்துள்ளது.  இதில் வேடிக்கை அந்த வைரஸின் பெயர்தான்.  நாட் பேட்யா… (Not Badya!!!). ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்தது போல கப்பல் துறையில் வருமானம் அவ்வளவு மோசமில்லை என்று நினைத்தார்களோ என்னவோ.  இந்த வைரஸ் ஒரு சிறு கடத்தியின் (பென் டிரைவ். மெமரி கார்டு போன்றவை) மூலம் கப்பலில் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு கணினியுடன் இணைத்தால் இது தன்னைத்தானே கடத்திக் கொண்டு கப்பலில் நிதி நிர்வாகம் செய்வோரின் மின்னஞ்சல் முகவரிகளுக்குள் புகுந்து கொள்கிறது.

இது இரண்டு வகையான ஆபத்து கொண்டது.  வெளியே செல்லும் மின்னஞ்சல் மூலமாகப் பரவுவதோடு, உள்ளே வரும், போகும் மின்னஞ்சல்களின் விவரங்களை மாற்றியமைக்கிறது.  அதனால் என்ன என்று கேட்கிறீர்களா? நிதி நிர்வாகத்தைச் சார்ந்த மெயிலில் பொதுவாக பணம் கொடுக்கல் வாங்கல் விபரங்கள், வங்கி விபரங்கள்தானே இருக்கும்.  இவற்றிலுள்ள வங்கிக் கணக்கு எண்களை மாற்றியமைத்து விடுகிறது.  அப்புறம் என்ன, நீங்களே திருடுபவன் பேங்க் அக்கவுண்ட்டில் பணத்தைக் கட்டிவிடுவீர்கள். இப்படி வர வேண்டிய தொகை, செலுத்த வேண்டிய தொகைகள் திருடப்பட்டால் அப்புறம் அந்நிறுவனம் விரைவிலேயே திவாலாகி விடும். 

இந்தக் கப்பல்களில் உள்ள கணினிகளைப் பயன்படுத்துவோர் தகவல்களும் திருடப்பட்டு தேவைப்படும் ஹேக்கர்களுக்கு விற்கப்படுகிறது.  கப்பலில் பெரிய வரவு செலவு இல்லையென்றாலும் கவலையில்லை, இவர்களின் வழித்தடம் தெரிந்து கொள்ள நிறையக் கடற்கொள்ளையர்கள் பங்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.  கப்பலில் கொண்டு வரப்படும் பொருள், அளவு தெரிந்து கொண்டு தாக்கும்போது அவர்களது பணி எளிதாகிறது.  கப்பல்கள்தானே நமக்கு என்ன என்று நினைப்பவர்கள் சற்றே நிற்க… கிட்டத்தட்ட 50.000 க்கும் மேற்பட்ட கப்பல்களை நம்பித்தான் உலகின் 90% வர்த்தகமே நடந்து கொண்டிருக்கிறது. அது பாதிக்கப்பட்டால் பாதிப்பு ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும்தான்…

வசதிக்காக கணினி மயமாக்கினால் இப்படிச் செய்கிறார்கள் என்பதால் கப்பல் நிறுவனங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு சுற்றுகின்றன.  MAERSK என்ற நிறுவனம் ஏற்பட்ட பெரிய பாதிப்பினால், தன் பெரும்பாலான பொக்குவரத்துகளைக் குறைக்க முடிவெடுத்துள்ளது.  எது எப்படியோ கப்பல்துறை பிழைக்க வேண்டுமானால், ஹேக்கர்கள்தான் கொஞ்சம் மனது வைக்க வேண்டும் போல… 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top