Lushgreen

#Sneezing: இரவில் தூங்கும் போது உங்களுக்கு தும்மல் வந்ததுண்டா? அப்படி வந்தால் என்னவாகும்?

Jun 01 2020 05:57:00 PM

தூங்கும் போது தும்மல் வந்தால் என்னவாகும்? என்பதை அறிந்துகொள்வதற்கு முன் தும்மல் எதனால் வருகிறது என்பதை முதலில் காணலாம். தும்மல் என்பது காற்று தவிர வேறு எந்த அந்நியப்பொருள் உதாரணத்திற்கு மாசு போன்றவை மூக்கில் நுழையும் போது, அதை சுவாசக்குழாய்க்குள் செல்ல அனுமதிக்க மறுக்கும் ஒரு தற்காப்பு வரம் என்றே சொல்லலாம். நமது நாசித் துவாரத்தில் கண்ணுக்கு புலப்படாத சிறிய முடியிழைகள் நிறைய உள்ளன.  நாம் உள்ளிழுக்கும் காற்றில் ஏதேனும் தூசு, துகள் இருப்பின் அவற்றை வடிகட்டி தூய்மையான காற்றை உள்ளே அனுப்புவதுதான் இவற்றின் வேலை.

இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம், நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது.  அளவுக்கு அதிகமாக தூசியோ, துகளோ காற்றின் வழியே நுழையும் பட்சத்தில் இந்தச் சவ்வுப் படலம் தூண்டபட்டு உள்ளே சென்ற மாசை வெளியேற்ற நீரை சுரக்கிறது. அந்த நேரத்தில் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து மிகவும் வேகமாக சுவாசப் பாதையில் உள்ள காற்றை வெளியேற்ற அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித்தள்ளும் நிகழ்வே தும்மல். 

ஆழமான தூக்க நிலையின் போது நமக்கு தும்மல் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஏனெனில் பகல் பொழுதில் நம்மை சுற்றியுள்ள மாசுக்களின் அளவை விட இரவில் மாசுக்களின் அளவு குறைந்து காணப்படும்.அதுமட்டுமின்றி ஆழமான தூக்கத்தில் இதயத்தின் செயல்பாடு குறைவாகக் காணப்படும் வேளையில், மாசுக்கள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் அவற்றால் மூச்சுக்குழலினுள் நுழைய முடிவதில்லை.இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் தும்மல் வர வாய்ப்புகள் குறைவே!