#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி??? என்ன திட்டம்???
  • 19:18PM Jul 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:18PM Jul 13,2019 Chennai

தமிழக முதல்வர் நதி நீரில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கிட்டத்தட்ட 2,371 கோடி ரூபாயில் புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியிருப்பதாகவும், அதை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். உண்மையில், பணத்தினால் தீர்க்கக் கூடிய பிரச்சினையா இது??? இந்தப் பிரச்சினையின் அடிப்படை எங்கிருந்து உருவானது என்பதைப் பார்த்தால், திட்டம் எந்த அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டியது அவசியம் என்பது புலப்படும். சரி, முதலில் CITY PLANNING-ல் என்ன நடந்திருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். அதாவது, ஒரு SITE APPROVAL கொடுப்பதற்கு முன்பு அதன் தன்மையைப் பொறுத்து, ஒரு கழிவு நீர் வடிகாலுக்கு (DRAINAGAE CANAL) ஒரு நீர் வடிகால் (WATER DRAIN) ஒன்றைக் குறைந்தபட்சம் அமைத்திருக்க வேண்டும்.

காரணம், சென்னையைப் பொறுத்தவரை, வடிகால்கள் பூமிக்கு வெளியே இல்லை என்பதுதான் அதன் பலம், பலவீனம் எல்லாம். கழிவு நீர் வடிகால் வழியே கழிவு நீர் போகும், நீர் வடிகாலின் வழி, மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேற்றப்படும். இதைச் சரிவர அமைக்காதது, அமைப்பதை உறுதிப்படுத்தாதது அரசு அதிகாரிகளின் அலட்சியமா இல்லை அரசு உத்திரவு வருவதற்கு ஏற்படும் காலதாமதமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சரி, இரண்டாவது பெரிய தவறு, அப்படி அமைக்கப்படாத இடங்களில், அமைக்க வலியுறுத்தாமல் அதை அவர்களே நீர் வடிகாலுடன் இணைத்தது. கழிவு நீர் பாதை SEWAGE WATER TREATMENT PLANT-க்கும், நீர் வடிகால் பாதை நதிகளோடும் இணைக்கப்பட்டிருந்தால் இன்றும் கூவம் ஆறாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், நீர் வடிகாலுடன் கழிவு நீர் வடிகால் இணைக்கப்பட்டதால், கழிவு நீர் மொத்தமும் ஆற்றில் கலந்து, அத்தனை பெரிய ஆற்றில் ஒரு சொட்டு கூடப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது கிட்டத்தட்டச் சென்னையின் அத்தனை வீதிகளையும் தோண்டி, இந்த வடிகால்களை இணைத்தால் மட்டுமே இந்தத் திட்டம் ஓரளவாவது பயன் தரும். 2015 வெள்ளத்திலும், 2016 வர்தா புயலின் போதும், மழை பெய்த சில மணி நேரங்களிலேயே சென்னை மிதக்க ஆரம்பித்து விட்டது. இதையெல்லாம் சரி செய்தால் மட்டுமே சென்னையைப் பொறுத்தவரை நதி நீரில் கழிவு நீர் கலப்பதை 60% வரையிலாவது குறைக்க முடியும். ஆனால், அது இந்தத் தொகையில் சாத்தியமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. இதைச் செய்வது சுலபமான காரியமில்லை என்றாலும், நடந்தால் சென்னை மக்கள் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்… நடக்குமா???

Manual Scavenging Labours  |  Best Hotels in Chennai  |  Higginbothams Book Store  |  Water Crisis Solution  |  World Water Day  |    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top