#FORESTFIRE: AMAZON காட்டுத்தீ எதிரொலி!!! வருகிறது காட்டுத்தீயைத் தடுக்க உதவும் GEL!!!
  • 12:15PM Oct 14,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 12:15PM Oct 14,2019 Chennai

பெருகி வரும் GLOBAL WARMING போன்ற காரணிகளால், கோடைக் காலத்தில் வெப்பத்தைத்தாக்குப் பிடிக்க முடியாமல், காடுகள் தீப்பற்றி எரிவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட, AMAZON காடுகள் ஒட்டுமொத்தமாகத் தீப்பற்றி எரிந்ததையும், அதை அணைக்க நடந்த பெரும் போராட்டங்களையும் நாம் பார்த்தோம். இது நாள் வரையிலும், தீ பிடித்துப் பரவிய பிறகே, அதை அணைக்க வனத்துறை - தீயணைப்புத் துறை - பேரிடர் மேலாண்மைத் துறையினர் வருகின்றனர். இதற்கு மாற்றாகத் தீப்பிடிக்கும் முன்னரே அணைக்க முடிந்தால்???

#1. AMERICA-விலுள்ள CALIFORNIA UNIVERSITY விஞ்ஞானிகள், ஒரு புதிய தீத்தடுப்பு முறையினை, GEL வடிவில் உருவாக்கியுள்ளனர்.

#2. அடர் கானகத்தில் தீப்பிடிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது என்ற  வனவியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி இதை உருவாக்கியுள்ளார்கள்..

#3. காட்டுத் தீ SEASON அல்லது கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே AEROPLANE மூலம், SPRAY செய்துவிட வேண்டும்.

#4. அந்த GEL, மரங்கள், செடி கொடிகள் மீது பட்டுப் படர்ந்து வெகு நாட்கள் வரை தீப்பிடிக்காமல் தடுக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

#5. தீ பரவாமல் இருக்க உதவும் AMMONIUM POLYPHOSPATE போன்ற CHEMICAL-களை, GEL போன்ற பொருளில் கலந்து வீசுவது நல்ல பலன் தரும் என்று தெரிய வந்துள்ளது.

#6. GEL காற்றில் ஆவியானாலும், இலை கிளைகளின் மேல் தீயணைக்கும் CHEMICAL-கள் தங்கியிருக்கும் என்பதால், தீப்பிடிக்க வாய்ப்புள்ள கோடைக் காலம் முழுவதும் அவை காட்டுத் தீ உருவாகாமல் தடுக்கும்.

#7. உபயோகிக்கவும் எளிது என்பதோடு, தீப்பிடித்த பின்னர் AEROPLANE மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதை விடச் செலவு குறைவுதான்.

#8. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Grass Eating Lion  |  Leonardo Di Caprio  |  Free Food Forest  |  Forest Fire  |Forest Rights Act  |

#FORESTFIRE என்பது நம்முடைய நுரையீரலை நாமே கெடுத்துக் கொள்வதற்குச் சமமானது. AMAZON காடுகளில் இருந்துதான் உலகில் உள்ள பெரும்பகுதி OXYGEN உற்பத்தியாகிறது என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட காடுகள் அழிக்கப்பட்டால், பிறகு OXYGEN – CARBON DIOXIDE IMBALANCE ஆனால், நம் பாடு திண்டாட்டமாகி விடும் என்பது மட்டும் உண்மை. அதைத் தடுக்க வந்திருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு நிச்சயமாகத் தேவையான கண்டுபிடிப்புதான். சரிதானே!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top