Lushgreen

பேரிக்காயில் இப்படி ஒரு அதிசயமா? இந்த அதிசய பேரிக்காய் எப்படி உருவாகியிருக்கும்?

Aug 06 2021 03:31:00 PM

பேரிக்காய்கள் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படும் ஒன்றாகும். பல வகையான பேரிக்காய்கள் அவற்றின் உண்ணக்கூடிய தன்மை மற்றும் பழச்சாறுகளுக்கு மதிப்புடையவை.

buddha-shaped-pear

நம்ம ஊருல ஆப்பிள் வடிவில் தான் பேரிக்காய்களை பார்த்திருப்போம். ஆனால் நமக்கு தெரியாத சில வடிவங்களில் கூட பேரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் இருக்கும் பேரிக்காய் உண்மையில் பார்த்தவுடன் நம்மை பரவசம் அடையச்செய்கிறது.

buddha-shaped-pear

இதற்கு காரணம் என்னவென்றால் அந்த பெருக்கை புத்தர் வடிவத்தில் இருப்பது தான். புத்தர் வடிவ பேரிக்காயை சியான்ஷாங் ஹாவ் என்பவர் உருவாக்கியுள்ளார். அச்சுக்களை பயன்படுத்தி பேரிக்காயில் அவர் புத்தரின் வடிவத்தை கொண்டு வந்துள்ளார். இது தொழிற்சாலையில் இருக்கும் அச்சுக்களை போல கிடையாது. நினைத்த மாத்திரத்தில் இந்த புத்தர் பேரிக்காய்களை அவர் உருவாக்கவில்லை.

buddha-shaped-pear

பேரிக்காயில் அச்சுக்களை பயன்படுத்தி புத்தரின் வடிவத்தை கொண்டு வருவதற்கு அவருக்கு ஆறு வருடங்கள் தேவைப்பட்டது. புத்தரின் வடிவத்தில் இருக்கும் இந்த வித்தியாசமான பேரிக்காய்களை பலரும் அங்கு ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். இந்த பேரிக்காய் ஒன்று 9 டாலர்கள் வரை விற்கப்படுகிறது.  இந்திய மதிப்பில் ஒரு பேரிக்காய் 680 ரூபாயாகும்.