புதநீலகந்தா கோவில்!!!
  • 09:24AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:24AM Sep 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவிலிருந்து சுமார் 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இந்த புதநீலகந்தா கோவில்.  தற்போது, நாராயணந்தா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்தக் கோவிலின் சிறப்பாகக் கூறப்படுவது கல்லினால் ஆன மிகப் பிரம்மாண்டமான விஷ்ணு சிலை, அதுவும் நீரில் மிதப்பதாகச் சொல்லப்படும் சிலைதான்.  வானத்தைப் பார்த்தாற்போல் படுத்தவாக்கில் அமைந்திருக்கும் இந்தச் சிலை சுமார் இரண்டிலிருந்து மூன்றடி ஆழமுள்ள நீரில் மிதந்தபடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதன் ஸ்தல புராணம் என்று பார்த்தால், ஒரு கணவன், மனைவி நிலத்தைத் தோண்டும் போது பாறையில் இருந்து இரத்தம் வடிந்ததாகவும் அதுவே இந்தச் சிலை என்று சொல்லப்படுகிறது.  இருப்பினும், வயலில் கிடைத்த சிலையைச் சுற்றி நீர் எப்படி வந்தது என்பது பற்றிய எந்தத் தகவலும் இல்லை. 

ஒருபுறம் இந்தச் சிலையை வடித்தது லிச்சவி மன்னர்கள் என்றும், 7ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தன் வடித்தது என்றும் பரவலாகப் பேசிக் கொள்ளப்படுகிறது.  இருப்பினும், புதநீலகந்தா என்னும் பெயரைக் கவணிக்கும் பொழுது புது அல்லது பூத நீல கண்டர் கோவில் எனும் தூய தமிழ்ப் பெயராகத் தோன்றுவதும் புரியாத புதிராக இருக்கிறது.  நீல கண்டர் விஷ்ணுவானது எப்படி என்பதும் சரிவர சொல்லப்படவில்லை.

 

சிலை மிதப்பதாகச் சொல்லப்படினும், நகர்வோ அல்லது மிதப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகத் தோன்றவில்லை.  இருப்பினும் அந்தச் சிலை வடிக்கப்பட்டது பாசல்ட் எனும் எரிமலைக் குழம்பை சட்டெனக் குளிர்விக்கும்போது உருவான கல்லாக இருக்கக்கூடும் என்று அறிஞர்கள் அனுமானிக்கின்றனர்.  இந்த பாசல்ட் பாறைகள் அடர்த்திக் குறைவான தன்மை காரணமாக, நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. 

எது எப்படியோ, 14 அடியில் ஒரு மிகப் பெரிய கலைப்படைப்பை, வித்தியாசமான ஒரு கல்லில் செதுக்கப்பட்ட அந்தச் சிலையை, கோவிலை அதன் அழகுக்காகவே கண்டிப்பாக ஒருமுறை பார்த்தேயாக வேண்டும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top