Highrise

இந்த வதந்தியை இன்னும் எத்தனை நாட்களுக்கு நம்பிக்கொண்டு இருப்பது ? உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்

Apr 08 2021 05:50:00 PM

குழந்தை பருவத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இருந்தது பபுள் கம். வாயில் மென்று அதை பலூன் போல ஊதி விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும். பபுள் கம்கள் செயற்கை ரப்பர் அல்லது மரங்களில் இருந்து கிடைக்கும் சிக்ளே என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இனிப்பு கலந்து தயாரிக்கப்படுவதால் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாயில் போட்டு மென்று விட்டு துப்பி விட வேண்டும்.

bubble-gum-issue

எக்காரணத்தை கொண்டும் பபுள் கம்மை விழுங்கி விடக்கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது மென்று கொண்டிருக்கும் போது தெரியாமல் விழுங்கி விட்டால் அது உங்கள் வயிற்றில் 7 வருடங்கள் வரை அப்படியே தங்கி விடும் என்று நாம் நினைத்து கொண்டிருந்தோம். அது முற்றிலும் தவறானது.

bubble-gum-issue

விழுங்கி விட்டோம் என்றால் அது வயிற்றின் உள்ளே சென்று விடும் என்பது மட்டும் உண்மை. வயிற்று பகுதியில் இருக்கும் போது அதிலுள்ள சத்துக்களை பிரித்து எடுக்க நமது உடல் முயற்சிக்கும். அந்த சமயத்தில் பிரித்தெடுக்க முடியவில்லை என்றால் கழிவாக வெளியே அனுப்பி விடும். எனவே பபுள் கம் விழுங்கினால் வெளியே வராமல் உள்ளேயே தங்கி விடும் என்று நினைத்து கொண்டிருந்தால் உங்கள் எண்ணங்களை மாற்றி கொண்டு தைரியமாக பபுள் கம் சாப்பிடுங்கள்.