#Bsnl : பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகைகள் !கலக்கத்தில் மற்ற மொபைல் நிறுவனங்கள் !!
  • 01:15AM Oct 29,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 01:15AM Oct 29,2019 Tamil Nadu

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்கிற பல மொழி போல  இப்பொழுது மொபைல் நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளால்   வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜீயோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல சலுகைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டது இதனால்  வாடிக்கையாளர்களிடையே இழந்த தனது பெயரை தக்க வைத்து கொண்டது.

bsnl.jpg

அதேபோல அரசு நிறுவனமான  பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்பொழுது தான் விழித்து கொண்டது போல அதனால் தான் இப்பொழுது  455 நாட்களுக்கான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டம்  ஒரு வருடத்திற்கானதாக இருந்தாலும் இம்மாதம் அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த புதிய திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான சலுகையுடன் கூடுதலாக 90 நாட்கள் வேலிடிட்டியை வழங்கவும் முடிவு செய்திருக்கிறது பிஎஸ்.என்.எல் நிறுவனம்.

bsnl2.jpg

மேலும் இந்த புதிய திட்டத்தின் படி  ரூ  1699/- க்கு  ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை தினந்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது தவிர, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றுக்கு வேலிடிட்டி முடியும் வரை 100 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். மேலும் 365  காலர் ட்யூன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது இந்த ரிசார்ஜ் திட்டம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top