Lushgreen

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று தான் சொல்வார்கள் இங்கே ஒரே கல்லில் மூன்று கிடைச்சிருக்கே!

Apr 07 2021 10:59:00 AM

இயற்கை சில சமயங்களில் நமக்கு பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக்காட்டும். அது நம் அன்றாட வாழ்க்கையிலேயே காண முடியும். அப்படி ஒரு அதிசயமான சம்பவம் தான் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.

brinja-three

மயிலாடுதுறையில் உள்ள கொள்ளிடம் பகுதிக்கு தினமும் கும்பகோணத்தில் இருந்து லாரிகள் மூலமாக காய்கறிகள் வந்திறங்கும். அப்படி வந்தபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் கத்தரிக்காய் தான். கத்தரிக்காயில் அப்படி என்ன அதிசயம் என்று தோன்றுகிறதா ? சாதாரண கத்தரிக்காய் அல்ல ஒரே காம்பில் விளைந்த மூன்று கத்தரிக்காய்கள். ஆம் ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய்கள் இருந்ததை கண்டு அங்கிருந்த கடைக்காரர்களும் பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.

brinja-three

பொதுவாக இப்படி ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய்கள் வந்திருப்பது மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் சிவபெருமானின் முக்கண் அம்சத்தை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளதால் இந்த கத்தரிக்காய்கள் அதிர்ஷ்டமானவை என்று கூறி வருகின்றனர். இந்த அதிசய கத்தரிக்காய் அந்த பகுதியை தற்போது பரபரப்பாக மாற்றியுள்ளது. வித்தியாசமாக இருந்த இந்த கத்தரிக்காயை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்து சென்றனர்.