தேவையற்ற திருமண சம்பிரதாயத்தைத் தவிர்க்க இளம் தலைமுறையின் புதுமுயற்சி!
  • 17:31PM Feb 09,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 17:31PM Feb 09,2019 Chennai

நமது இந்தியா பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடாக இருந்தாலும் மூடநம்பிக்கை, தேவையற்ற சம்பிரதாயங்களில் முழுகியுள்ள நாடு! ஏதோ ஒரு நூற்றாண்டில் எவராலோ தொடங்கிய சில சாங்கிய சம்பிரதாயங்கள் தற்போது மூடநம்பிக்கையில் முழுகி மனிதனையே பின்னோக்கி சிந்திக்க வைக்கிறது. சில சம்பிரதாயங்கள் மனித உரிமையைக் கூட மதிக்கவிடாமல் தடை போடுகின்றன. இதில் முக்கியமாகத் திருமண சம்பிரதாயங்களும் அடங்கும். ஒரே சாதியில் பெண் எடுக்கவேண்டும், திருமணத்தின் போது கைம்பெண்கள் வரக்கூடாது, திருமணமாகப் போகும் பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர் வீட்டுக்குப் போகக்கூடாது போன்ற சம்பிரதாயங்கள் இன்றளவும் பின்பற்றி வரப்படுகிறது. ஆனால் இந்த 21-ம் நுற்றாண்டிலாவது இதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இளம் தலைமுறையினர் தங்களது திருமணத்தில் நடக்கும் தேவையற்ற சம்பிரதாயங்களைத் தவிர்த்து வருகின்றனர். அப்படி மாற்றத்தை உண்டாகி வரும் சிலரது திருமண நிகழ்வுகளை இங்குப் பார்ப்போம்.

1. பெங்காலி திருமணங்களில் "Kanakanjali" என்ற சடங்கு ஒன்றுள்ளது. இந்தச் சடங்கை செய்தால் மணப்பெண்ணுக்குத் தனது பெற்றோருடனான உறவு முற்றிலும் முடிந்ததாக அர்த்தம். சமீபத்தில் நடந்த ஒரு பெங்காலி திருமணத்தில் மணப்பெண் இந்தச் சடங்கை செய்ய மறுத்துவிட்டார். தனக்கும் தனது பெற்றோருக்குமான உறவு எப்போதும் பிரியாது, கோடி புண்ணியம் செய்தலும் அது தனது பெற்றோர் தன்னை வளர்த்ததுக்கு ஈடாகாது என்று சடங்கு செய்யச் சொன்னவர்களிடம் சட்டையடித்தது போலக் கூறியுள்ளார்.

2. அதேபோல பெங்காலில் நடந்த மற்றொரு திருமணத்தில், அனைத்துச் சடங்கையும் பெண்களே முன்னின்று செய்தனர். மந்திரம் ஓதுவதில் இருந்து மேளதாளம் அடிப்பது வரை அனைவரும் பெண்களே! பத்திரிகையிலும் மணப்பெண்ணின் பெயருக்கு பின் தாய் பெயர் தான் இருந்தது. அதேபோல இந்தத் திருமணத்தில் தந்தைக்குப் பதிலாக தாய் தான் கன்னிகாதானம் செய்தார்.

3. சாதியைப் போன்ற கொடிய விஷயத்தை மனிதன் இதற்கு மேல் கண்டுபிடித்து விட முடியாது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக பூனேவை சேர்ந்த இந்தத் தம்பதி தங்களது திருமண பத்திரிகை முதல் முகநூல் பதவி வரை எதிலும் தங்களது பெயரிலுள்ள Surname-ஐ போடவில்லை. இவர்களது திருமணத்தில் மந்திரங்களும் ஓதப்படவில்லை! அதேபோல திருமணத்துக்கு வருபவர்கள் திருமண பரிசுகளுக்குப் பதிலாக புத்தகங்களை வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.

4. திருமணத்தின் போது கைம்பெண்கள் வரக்கூடாது என்று இன்றளவும் சிலர் கூறிக்கொண்டுள்ளனர். இதனை மறுக்கும் விதமாக குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜிதேந்திர படேல், தனது மகனின் திருமணத்திற்கு 1800 கைம்பெண்களை அழைத்து தனது மகனுக்கு ஆசீர்வாதம் செய்யச் சொல்லியுள்ளார். இதைப் பற்றி கூறுகையில் அவர், இதுபோன்ற தேவையற்ற மூடநம்பிக்கையை நாம் இணைந்து ஒழித்தாகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top