Exquisite

கையில் கத்தியுடன் ரணகளப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்! இவர் ஏன் இப்படி ஒரு காரியம் செய்ய வேண்டும்?

Apr 20 2021 09:24:00 AM

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. இவர் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியுள்ளார். இப்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். தற்போது கையில் கத்தியுடன் வளம் வரும் அவர் செய்த செயல் ஒன்று அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

bread-lee

நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ். ஒரு காலத்தில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர். இவரும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். ஒரு வேடிக்கையான சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஸ்காட் ஸ்டைரிஸ். அதில் பிரெட் லீ ஸ்டைரிஸ்க்கு முடி திருத்தும் பணிகளை செய்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டைரிஸ் எங்கள் குழுவில் சிகையலங்கார நிபுணர் யாரும் இல்லை என்பதால் பிரெட் லீ இந்த பணியை செய்கிறார். பிரெட் லீ செய்துள்ள புதிய சிகையலங்காரத்தில் விரைவில் என்னை காண தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

bread-lee

இந்த வீடியோவானது பயங்கரமாக ட்ரெண்டான நிலையில் பலரும் பிரெட் லீயை புகழ்ந்து தள்ளுகிறார்கள். கிரிக்கெட் மட்டுமல்லாது இசையிலும் ஆர்வம் உள்ளவர் பிரெட் லீ. அந்த வரிசையில் முடி திருத்தும் வேலைகளை கூட செய்வதால் இவர் ஒரு வித்தியாசமான ஆல் ரவுண்டர் என்றும் பலர் கூறி வருகின்றனர்.