சுதந்திர தினத்தை புறக்கணித்த இளைஞர்கள்…
  • 11:13AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:13AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஆகஸ்டு 15.  பேஸ்புக். வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் உலவும் பெரும்பாலான இளைஞர்கள், சுதந்திர நாளன்று வாழ்த்துகள் தெரிவிக்க மறுத்துப் புறக்கணித்தார்கள். 

2016 நவம்பர் மாதம் முதலே மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து - இதன் மூலம் ஏகப்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டன.  நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மதுக்கடை ஒழிப்பு என ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு போராட்டங்கள் நடக்கத் துவங்கி விட்டது.  போதாததற்கு எரிவாயு மானியம் ரத்து, கேஸ் மானியம் ரத்து, பெட்ரோல் விலையேற்றம் போன்றவை வேறு.  இந்நிலையில், சென்ற வாரம் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் 63 குழந்தைகள் உயிரிழந்தன.  ஒரு வாரம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்திற்கு இரு நாட்கள் உள்ள நிலையில், திடீரென்று ஒவ்வொருவராகச் சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போவதில்லை என்று முடிவெத்தனர்.

இது பரபரவென்று பரவி, சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் - சமூக வலைத்தளப் பக்கங்களில், சுதந்திர தினம் கொண்டாடப் போவதில்லை எனப் பதிவிடத் தொடங்கினர்.  வழக்கமாக இது போன்ற சமயங்களில் பிஸியாக இருக்கும் சமூக வதைதளங்கள் சற்றே சுணங்கின… இருப்பினும், ஒவ்வொரு இளைஞனின் ஆதங்கமும், சமூக முன்னேற்றத்தின் மீதான அக்கறையும் இதன் மூலம் மிகப் பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், தங்களை திட்டியதைக் கூட பொருட்படுத்தாமல் விளக்கமளித்து உண்மையிலேயே பாராட்டுக்குரியதாகும். அவற்றுள் ஒரு பதிவு கீழே,

“சுவாசிக்கக் காற்று இல்லாமல் மரணித்த 63 பிஞ்சுகள் -

நமக்குச் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்…”

எங்கேயோ உயிர் நீத்த குழந்தைகளுக்காக, நமது இளைய தலைமுறையின் கண்ணீர் நிச்சயம் பதிலளிக்கப்பட வேண்டிய ஒன்று…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top