Misc

திருமணம் நிச்சயம் செய்த பின்னர் ஒரு ஆண் பெண்ணிடம் பேசத் தயக்கம் காட்டினால் என்ன மாதிரியான பிரச்சனைகள் உண்டாகும்?

Jun 29 2021 12:56:00 PM

தற்போது நம்ம ஊரில் காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைக்கும் நடைமுறை இப்போது அதிக அளவில் குறைந்துவருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் நாகரீக வளர்ச்சியில் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் தங்களுக்கு பிடித்த நபர்களை வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்கிறார்கள். இன்னமும் சிலர் வீட்டில் பார்க்கும் பெண்களைத் தான் பெற்றோர் சொல்படி திருமணம் செய்யும் பழக்கம் இருந்துவருகிறது.

boy girl speech mobile

அப்படி பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்துவைக்கும் பெண்களிடம் சில ஆண்கள் அடிக்கடிப் பேசத் தயங்குகிறார்கள். குறிப்பாக 90's கிட்ஸ் பெண்களிடம் பேசவே வெட்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? எப்போதுமே பெண்கள் என்கிற பழக்கமே இல்லாத காரணத்தால் புதிதாக ஒரு பெண்ணிடம் பேச நிறைய பேர் கூச்சப்படுவார்கள்.

boy girl speech mobile

நாம் அடிக்கடி போன் செய்து பேசினால் நம்மை வழிந்து பேசுகிறார் என்று பெண் நினைத்துக்கொள்வார் என்றும் சிலர் பேசாமல் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் அந்த பொண்ணை நம்ம தான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறோம், எல்லாம் திருமணத்திற்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சிலர் சாதாரணமாக விட்டுவிடுகிறார்கள். எது எப்படியோ திருமணத்திற்கு முன்னர் பேசாமல் இருப்பதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் திருமணம் ஆனவுடன் அவர்களுடன் பேசி பழகுவது ரொம்ப முக்கியம் பாஸ்.

boy girl speech mobile