Misc

காதலனுக்கு மேலே! கட்டியவனுக்கு கீழே! குடும்பங்களை சீர்குலைக்கும் இந்த பெஸ்டிகள் யார்?

Sep 14 2021 01:15:00 PM

சமீப காலமாக எனது நெருங்கிய நண்பர் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பது அவரது செயல்களில் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. வேலையில் கவனம் செலுத்தாமல் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போன்ற ஒரு உணர்வில் இருந்தார். சமீபத்தில் தான் திருமணம் நடந்தேறி இருந்த நிலையில் அவரது இந்த மன உளைச்சல் எதனால் வந்தது என்று ஒரு கேள்வி எழுந்த நிலையில், அவரை சற்று தனிமையில் அழைத்து சென்று அவரது பிரச்சனைகளை மெல்ல கேட்டேன். அவரது பிரச்சனைகளை மனம்விட்டு பேச வற்புறுத்தவே சற்று தயங்கி சொல்ல ஆரம்பித்தார்.

boy-bestie house-wife

அவரது திருமணம் காதல் கலந்து பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஊரறிய அரங்கேறி இருந்தது. அவரது மனைவி மீது அதீத காதல் கொண்டு இருப்பர் போல. ஆனால் சமீப காலங்களாக அவரது மனைவியின் மீதான நம்பிக்கையில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏன்? என்ன நடந்தது? என்று கேட்கவே, அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. அவரது மனைவி சில விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவதாக மனவேதனையுடன் கூறினார். அது என்னவாக இருக்கும் என்ற அவரது கற்பனை அவரை வேலையிலும், குடும்பத்திலும் கவனம் செலுத்த விடாமல் மிகவும் மனவேதனை அளிப்பதாக தெரிவித்தார். இத்தனைக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வளவு காதலித்து தான் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். இருந்தாலும் இருவருக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி? என்ற எண்ணம் அவருக்கு மேலும் தொல்லை கொடுத்து கொண்டு இருந்தது.

boy-bestie house-wife

ஒரு வேலை தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட்டு விட்டதா? அதனால் தான் அவள் என்னிடம் இருந்து விலகி செல்கிறாளா? இல்லை நான் அறியாமல் செய்த தவறு ஏதும் அவளை மனதளவில் புண்படுத்தி இருக்கிறதா? என்றெல்லாம் அவரது கற்பனை சென்றுகொண்டு இருக்கவே, நான் அவரை சமாதானம் செய்தேன். எனக்கு ஒரு நல்ல யோசனை வரவே, அவரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றேன். அவரது மனைவி சிரித்த முகத்துடன் வரவேற்க, ஒரு காபி குடித்துவிட்டு, அடுத்த நாள்  இரவு விருந்துக்கு எங்கள் வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

boy-bestie house-wife

அடுத்த நாள் அவர்கள் இருவரும் எங்கள் வீட்டை அடைந்தவுடன், காபி மற்றும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு முடித்த பிறகு எனது மனைவியோடு அந்த பெண் சமயலறைக்கு சென்று உரையாடிக்கொண்டு இருந்தார். அனைவரிடமும் அன்பாக மற்றும் சகஜமாகவே இருந்த அந்த பெண், அவளது கணவரிடம் மட்டும் இடைவெளியோடு இருக்க என்ன காரணம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும் போது, உணவு தயாரானது. பின்னர் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சற்று தனிமையில் அமர்ந்து உரையாடலை துவங்கினோம்.

boy-bestie house-wife

அந்த பெண்ணின் கணவர் பணியிடத்தில் அவளை நினைத்து படும் கஷ்டங்களை மெதுவாக கூறவே, அந்த பெண்ணின் முகத்தில் ஒரு பயம் கலந்த படபடப்பு ஏற்படுவதை காண முடிந்தது. சரி மெதுவாக அனைத்து விஷயங்களையும் பேசி முடிக்கும்போது அந்த பெண்ணின் கண்கள் கலங்கியதோடு மட்டுமல்லாமல் கைகளும் சற்று நடுக்கத்தில் இருப்பது தெரிந்தது. அந்த பெண் ஏதோ ஒரு பயத்தினால் தான் இவரை விட்டு விலகி இருக்கிறாள் என்பதை உணர முடிந்தது. அது என்னவென்று அவளிடம் எனது மனைவி சற்று ஆறுதலாக கேட்க, முதலில் தயங்கிய அந்த பெண் பின் மெல்ல அவளது பிரச்சனைகளை சொல்ல தொடங்கினாள். அவள் சொன்னவை உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது.

boy-bestie house-wife

அவளது பெஸ்டி மூலமாக அவள் அனுபவித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் காரணமாக அவளால் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறினாள். அதாவது அவளது ஆண் பெஸ்டியிடம் அவளை பற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறாள். அவளது திருமணத்திற்கு முன்பு இருந்த சில காதல்கள் போன்ற கசப்பான உண்மைகளை அவளது ஆண் பெஸ்டியிடம் தெரிவித்திருக்கிறாள். சில முக்கிய தருணங்களில் அவளது ஆண் பெஸ்டியோடு உணவகங்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களுக்கு சென்று இருக்கிறாள். ஆனால் அது அவரது காதல் கணவருக்கு தெரியாது. தற்போது இதை வைத்து அவளது ஆண் பெஸ்டி தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக கூறினாள்.

boy-bestie house-wife

அதாவது நட்பு என்பது மிகவும் புனிதமானது. அதற்கு ஆண் மற்றும் பெண் என்ற பேதம் கிடையாது. ஆனால் அதையும் தாண்டி பெண்களிடம் உரிமை எடுத்து கொள்ளும் ஆண்மகன் நிச்சயம் கணவனாக அல்லது சகோதரனாக இருக்கலாம். இவர்களிடம் மனம் விட்டு பேச முடியாத விஷயங்களையா, நீங்கள் உங்கள் ஆண் பெஸ்டியிடம் பேசிவிட போகிறீர்கள். உங்களை மனதில் சுமக்கும் கணவர் உங்கள் கடந்த கால வாழ்க்கை தெரிந்தால், என்ன செய்து விட போகிறார்? மனம் விட்டு பேசும்போது நீங்கள் தவறே செய்து இருந்தாலும் அது மன்னிக்கப்படும்.

boy-bestie house-wife

பெண்கள் இது போன்ற தருணங்களில் முதலில் நம்ப வேண்டியது கணவரை மட்டும் தான். அதே போல கணவரும் மனைவி கண்ணியமாக இதுபோன்ற விஷயங்களை வெளிப்படுத்தும்போது, அவளை காயப்படுத்தாமல் அதனை எதிர்கொண்டு, அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்கள் ஆண்களோடு நட்பு கொள்வது என்பது எப்போதும் தவறாகாது. ஆனால் அதைவிட கணவரிடம் அல்லது தந்தையிடம் இது போன்ற விஷயங்களில் வெளிப்படை தன்மையோடு இருப்பது நல்லது. தன்னுடைய எந்தவொரு அந்தரங்க விஷயங்களையோ அல்லது ரகசியங்களையோ, சம்பந்தம் இல்லாத நபரோடு பகிரும் போது இதுபோன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இந்த அறிவுரைகளை கேட்டவுடன் அந்த பெண் சற்று ஆறுதலாக உணர்ந்தாள். பிறகென்ன, அவளது கணவருக்கும் மன குழப்பங்கள் மறைந்து மகிழ்ச்சியோடு மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.