#NiagaraFalls நூறாண்டுகளுக்கு முன்பு முழுகிய படகு, இயற்கையின் லீலையால் வெளியில் வந்தது!
  • 22:05PM Nov 06,2019 Niagara Falls
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 22:05PM Nov 06,2019 Niagara Falls

உலகின் மிகப்பெரிய நீர்விழிச்சிகளில் ஒன்றான நயாகரா நீர்விழிச்சி கடந்த 200 வருடங்களாக உலகின் முக்கியச் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்நிலையில் நூறாண்டுகளுக்கு முன்பு நயாகரா ஆற்றில் முழுகிய இழுவை படகு ஒன்று தற்போது இயற்கையின் லீலையால் வெளியில் வந்துள்ளது. கடந்த 1918-ம் ஆண்டுக் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இருந்து நயாகரா ஆற்றின் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே 2 பேர் கொண்ட இழுவை படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆனால் திடிரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்தப் படகு இரண்டு பாறைக்கு நடுவே சிக்கிக்கொண்டது. அப்போதிருந்த கருவிகளைக் கொண்டு அந்த இழுவை படகை காப்பாற்ற அனைவரும் முயற்சித்தனர், ஆனால் அந்த இருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அந்தப் படகு சுமார் 150 அடி ஆழத்தில் மூழ்கியது.

Boat Stuck At Niagara Falls For More Than 100 Years Comes Loose

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நயாகரா நீர்விழிச்சி அருகே ஏற்பட்ட சூறாவளி காற்று வீசியதன் காரணமாக 101 ஆண்டுகள் நயாகராவின் நீரோட்டத்துக்கு அடியில் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்துள்ளது. நீரோட்டத்தின் காரணமாகத் தற்போது நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் அடித்துவரப்பட்டுள்ள படகு இன்னும் சிலதினங்களில் அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. 101 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்த படகினை காண அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top