Timeless

ஆஹா இது என்ன அதிசயம் ! ஊதா கலரு தீவு இதுக்கு காரணம் யாரு ? என்னம்மா இப்படி கலர் அடிச்சிருக்கீங்களேம்மா !

Apr 13 2021 08:23:00 PM

இதுநாள் வரையில் கதைகளில் இப்படி கேள்விப்பட்டிருப்போம். அது இப்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது. தென்கொரியாவில் உள்ள பன்வோல் மற்றும் பக்ஜி தீவுகள் ஊதா நிறத்தில் காட்சியளிக்கின்றன. இந்த தீவுகளில் பெரும்பாலும் வயதானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தீவுகளின் ஊதா நிறம் காரணமாக நிறைய சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

purple-iland

இந்த தீவில் உள்ள வீடுகளின் கூரைகள், சாலைகள், தெருக்கள் என எல்லாமே ஊதா வண்ணத்தில் காணப்படுகின்றது. இங்கு வாழும் மக்களும் ஊதா நிற ஆடைகளை அணிகின்றனர். உணவகம் கூட ஊதா நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அங்கு பயன்படுத்தும் அரிசி மட்டுமல்லாது பரிமாறப்படும் எல்லா உணவுகளும் ஊதா நிறத்தில் மட்டுமே இருக்கின்றது. இந்த தீவுகளை ஊதா நிறத்திற்கு மாற்றுவதற்காக சுமார் 4.25 பில்லியன் டாலர் செலவளித்துள்ளார்கள்.

purple-iland

தீவுகளை ஒன்றிணைக்கும் பாலம் கூட ஊதா நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஊதா வண்ண தீவுகள் சுற்றுலா செல்ல மிகச்சிறந்த இடமாகும். வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள். அசத்தலான ஊதா நிற பூக்கள் உங்களை அன்புடன் வரவேற்கும்.