Exquisite

எல்லாம் இப்படியே இருந்தா எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது ? இப்படியும் கூடவா இருக்குது

Apr 21 2021 06:31:00 PM

உலகெங்கிலும் பல்வேறு வித்தியாசமான நகரங்கள் இருக்கிறது. பல்வேறு விநோத பழக்கங்களை கடைப்பிடித்து வரும் நாடுகள் இருக்கின்றன. அந்த வகையில் மொராக்கோ நாட்டில் அமைந்துள்ள செப்ஷுயென் என்ற நகரம் மிகவும் தனித்தன்மை வாய்ந்த நகரமாக அமைந்துள்ளது.

blue-city

இந்த நகரத்தின் சிறப்பு என்னவென்றால் நகரம் முழுவதும் நீல நிறத்தில் காட்சியளிக்கும். இங்கு எந்த திசையில் திரும்பினாலும் அனைத்துமே நீல நிறத்தில் உங்களுக்கு தெரியும். வானம் மற்றும் கடலைத்தான் இதுவரை நீல நிறத்தில் பார்த்திருப்போம். இங்குள்ள கட்டடங்கள், தெருக்கள் என அனைத்துமே நீல நிறத்தில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த நீல நிற நகரம் இப்படி இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

blue-city

இங்கு வாழ்ந்த ஒரு சில மக்கள் கடவுள் நீல நிறமானவர் என்று நம்பியதால் இந்த வண்ணத்தில் நகரத்தை வடிவமைத்ததாக நம்பப்படுகிறது. வானத்தையே இவர்கள் கடவுளாக கருதியதால் கூட இப்படி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வேறு சிலர் நீல நிறம் காரணமாக கட்டடங்கள் நீர் போல தெரிவதால் கொசுக்கள் வராது என்ற நம்பிக்கையில் இந்த நிறம் பூசப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு கொசுக்கள் குறைவாகவே இருப்பதை இன்றும் காண முடிகிறது.

blue-city

மற்றொரு இனத்தை சேர்ந்த மக்கள் வெப்பத்தில் இருந்து காப்பதற்காக நீல நிறம் பயன்படுவதாக கூறுகின்றனர். கோடை காலத்தில் நீல நிறம் வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. பல்வேறு காரணங்கள் இருப்பினும் நீல நிறத்தில் அமைந்துள்ள இந்த நகரம் சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம் போல தோன்றுவது சிறப்பான ஒன்றாகும். மேலும் நீல நிறத்தின் காரணமாக அற்புதமான புகைப்படங்களை எடுப்பதற்காகவே இந்த நகரத்திற்கு ஏகப்பட்ட புகைப்படக்கலைஞர்கள் அடிக்கடி வருகை புரிவதும் ஒரு சுவாரசியமான விஷயமாகும்.