Exquisite

இதுவரை கண்டிராத புதிய நிறத்தில் அசத்தும் அற்புதமான பழம் ! இப்படி ஒன்றை வேறு எங்கும் காணமுடியாது

Apr 13 2021 08:02:00 AM

அதிக சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்றாகும். வாழைப்பழத்தில் செவ்வாழை, தேன்வாழை, கற்பூரவள்ளி, பச்சை வாழை, மொந்தன் வாழை, பூம்பழம், ரஸ்தாளி என்று ஏகப்பட்ட வகைகள் உள்ளன. இதில் பச்சை மற்றும் செவ்வாழை இரண்டை தவிர மீதி அனைத்து வகையான பழங்களும் மஞ்சள் நிற தோலுடன் காணப்படும்.

blue-banana

ஆனால் இதுவரை எவருமே கண்டிராத நீல நிற வாழைப்பழம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ப்ளூ ஜாவா வாழைப்பழம் என்று அழைக்கப்படும் இந்த பழத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் தோல் மட்டுமல்ல பழமும் நீல நிறத்தில் காணப்படுகிறது. கிரீம் போன்ற சுவையில் இருக்கும் இந்த வாழைப்பழம் மிருதுவாகவும் உள்ளது. வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

blue-banana

மிகவும் அரியவகை வாழைப்பழமாக இருக்கும் இந்த பழம் சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. தென்கிழக்கு ஆசியா மற்றும் ஹவாய் பகுதிகளில் மட்டுமே இந்த பழம் கிடைக்கிறது. அதிக குளிர்ச்சியான இடத்தில் உறைநிலைக்கு கீழுள்ள தட்பவெட்ப நிலையில் இந்த பழம் வளர்கிறது. இந்த வாழைப்பழத்தை பற்றி ஒருவர் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் வியப்பில் வாயடைத்து போயுள்ளனர்.