Lushgreen

யூடியூப் மேக்கப் வீடியோவை நம்பி போனால் முகம் முழுக்க பேக் அப்! உள்ளதும் போச்சு லொள்ளக் கண்ணான்னு புலம்ப வேண்டுமா?

Feb 03 2021 12:10:00 PM

பல யூடியூபுகளில் வி ட்டமின் E கேப்ஸ்யூலை வைத்து முடிவளரும் என புரோமோட் செய்கிறார்கள், இன்னும் சிலரோ முகத்தின் நிறத்தை கூட்டும் என்கிறார்கள். நம்ம பெண்களும் அதெல்லாம் உண்மையா இல்லையா? அவர்கள் தோ ல்நல ம ருத்துவரா? இல்லை அழகு கலை நிபுணர்களா? என எதையும் அறியாமல் யூடியூபுகளில் சொன்ன உடனே அதனை முயற்சி செய்கிறார்கள். 

fair-skin natural-remedy

பெரும்பாலும் யூடியூபுகளில் ஈர்ப்பை ஏற்படுத்தும் போட்டோக்களை பதிவிட்டு க வர்ந்து விடுகின்றனர். கருப்பாக உள்ள முகம், கோல்கேட் போன்ற பற்பசையை பயன்படுத்திய பின்னர் கலராக மாறிவிடுகிறதாம். இதெல்லாம் நம்பி வீட்டுப்பக்கம் உள்ள எட்டாவது படிக்கும் பெண் முகத்தை கெ டுத்து கொண்டாள். முகம் முழுக்க சின்ன சின்ன சி வப்பு கொ ப்புளங்கள் எழுந்துள்ளது. படித்து பக்குவமான பெண்களே இதையெல்லாம் நம்பி முயற்சி செய்யும் போது, சின்ன பெண் நம்பாமல் இருப்பாரா?

fair-skin natural-remedy

பக்கத்து வீட்டு பெண்ணை போல யாரும் முகத்தை கெ டுத்துக்கொள்ளக்கூடாதென விழிப்புணர்விற்காக இந்த பதிவு. பல யூடியூபுகளில் வி ட்டமின் E கேப்ஸ்யூலை கொண்டு பல வீடியோக்கள் செய்கிறார்கள். அதெல்லாமே சரியா? முயற்சி செய்யலாமா என்பதை ஒருமுறை ஆராய்ச்சி செய்யுங்கள். வி ட்டமின் E கேப்ஸ்யூல் அ ழற்சி தடுப்பு பொருளாக செயல்படும் தன்மை கொண்டது. இதனை முகத்திற்கு பயன்படுத்தும் போது, சருமத்தின் நிறம் கூடி முகம் பளபளப்பாகும். முகத்தில் வரும் சு ருக்கங்களையும் வயதான தோ ற்றத்தையும் நீக்கும் தன்மை கொண்டது. சிலருக்கு முகத்தில் பள்ளம் பள்ளமாக இருக்கும் பார்த்திருப்பீர்கள், அதனையும் முற்றிலுமாக நீக்கும். ஆனால் அதற்கு குறைந்தது மூன்று மாதங்களாவது இதனை பயன்படுத்தி இருக்க வேண்டும். 

fair-skin natural-remedy

எண்ணெய் ச ருமம் கொண்டவர்கள் தயவு செய்து இதனை பயன்படுத்த வேண்டாம். தோழிக்கு எண்ணெய் சருமம் தான், அவர் பயன்படுத்திய சில நொடிகளிலே ஆங்காங்கு அவளுக்கு அ ரிப்பு எடுக்க துவங்கிவிட்டது. அதுமட்டுமின்றி தோ ல் தடித்துவிட்டது. எண்ணெய் ச ருமம் உள்ளவர்கள், இந்த வி ட்டமின் E கேப்ஸ்யூலை கைகால்களில் பூசிக்கொண்ட பின்னர், எந்த அ ரிப்பு பி ரச்சனையும் இல்லை என்றால், முகத்திற்கு பயன்படுத்துங்கள். வாரத்திற்கு இரண்டு முறை தான் இதனை நீங்க பயன்படுத்த வேண்டும். 

fair-skin natural-remedy

அன்றாடம் பயன்படுத்தினால் கண்டிப்பாக முகத்தில் பிர ச்சனை வரும். முகத்திற்கு அப்படியே நேரடியாக பயன்படுத்த வேண்டாம், ஏதாவது எண்ணெய்யுடன் கலந்து பயன்படுத்துங்கள். அதேபோல முடிக்கு தேய்க்கும் போதும், வேறு ஏதாவது எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்துங்கள். இன்னொன்று விட்டமின் E கேப்ஸ்யூல் கொ ழுப்பு தன்மை கொண்டது என்பதனால் இதனை பயன்படுத்தும்போது, முகத்தில் உள்ள அ டிபோஸ் தி சுக்களில் கொ ழுப்பாக சேகரிப்பட்டு, முகத்தை குண்டாக காட்டும் என இதனை பயன்படுத்திய சிலர் கூறுகின்றனர். 

fair-skin natural-remedy

இறுதியாக உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும், 'இதனை பயன்படுத்தலாமா வேண்டாமா?' எந்த அழகு குறிப்பாக இருந்தாலும் கைகால்களில் முயற்சி செய்து பாருங்க, எந்த பக்கவி ளைவும் இல்லையென்றால் அதனை தொடர்ச்சியாக முகத்திற்கு பயன்படுத்துங்கள். அதேபோல் யூடியூபுகளில் சொல்லப்படும் டிப்ஸ்க்களை செய்யும் முன் அது உண்மையா என ஆராயுங்கள், அவர்கள் த வறான டிப்ஸ்களை கூறி பணம் சம்பாதிக்க நாமும் ஒரு காரணமாகிவிடக்கூடாது.