CITIZENSHIP BILL: திடீரென்று பல்டியடித்த பாஜக!!! வடகிழக்கு மாநிலங்களில் பரவும் எதிர்ப்பால் முடிவு!!! அமித் ஷா அறிவிப்பு!!!
  • 15:34PM Feb 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:34PM Feb 04,2019 Chennai

கடந்த வாரத்தில் ஏற்கெனவே நாம் எப்படி CITIZENSHIP BILL என்ற அறிவிப்பால், வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு மட்டுமல்ல, அதோடு கூட்டணி வைத்து அரசை ஏற்படுத்தியவர்களுக்கும் சிக்கல் உருவானதைப் பற்றிப் பார்த்தோம். அதோடு கறுப்புக் கொடி போராட்டங்களும், அதற்கு எதிராக முட்டுக் கொடுக்க ஆளும் கட்சித் தரப்பினர் வெள்ளைக் கொடிப் போராட்டங்களையும் நடத்தி வருவதை தெரிவித்தோம். இந்நிலையில், எதிர்கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலையில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என்று தெரிய வந்ததால், நடக்கும் நாடாளுமன்றத் தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் குறைவு என்று தெரிய வருகிறது. காரணம், கிட்டத்தட்ட வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமுமே இந்த சட்டத்தால் பாஜக எதிர்ப்பு நிலைக்கு மாறிவிட்டது.

தற்போது பாஜக கூட்டணி அமைத்த மாநிலங்களில் அசாம் ஏற்கெனவே நழுவிவிட்டது. மிசோரம், சட்டம் நிறைவேற்றப்பட்டால் பாஜகவைக் கூட்டணியை விட்டுத் துரத்தி விடுவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டி விட்டது. ஆக இத்தனை பேருடைய எதிர்ப்பால், இதைச் சட்டமாகக் கொண்டு வந்தால் கூட பாஜக கூட்டணியே இதற்கு எதிராக வாக்களித்து விடும் என்பது உறுதி. இதனால், வேறு வழியின்றி, ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக, பாஜகவின் நிலைப்பழடு கீழிறங்கி வந்துள்ளது. அதன்படி, அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை ஆதரித்தால் மட்டுமே இது நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று பாஜக தலைவர் அமீத் ஷா நேற்று ஆங்கில நாளிதழ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கும்போது, இந்த சட்டத்தைக் கொண்டு வரும் முன்பு வரை பாஜகவின் செல்வாக்கு வளர்ந்து வந்த வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமுமே பாஜக எதிர்ப்பு நிலைக்கு தாவியுள்ளது. இதற்கு அறிவிக்காமல் இருந்திருந்தால், இவர்கள் மட்டும் இவர்களுடைய கூட்டணிக் கட்சிகள் இத்தனை பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்காது என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது சும்மா, இருந்த சங்கை தாமே எடுத்து ஊதி, தனக்கே எதிர்ப்பு நிலையை உருவாக்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்கள். எது எப்படியோ, அவர்களுக்கு அவர்களே தோல்விக்கு ஏற்பாடு செய்து மக்களின் எதிர்ப்பையும் தாங்களாகவே பெற்றுக் கொள்கிறார்கள். இனியேனும் சிந்தித்தால் கூடப் பரவாயில்லை. என்ன செய்யப் போகிறது பாஜக இப்போது???

Top