#MostExpensiveElection உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் மட்டுமில்ல, காஸ்ட்லியான தேர்தலும் 2019 தேர்தல் தான்!
  • 17:12PM Jun 06,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:12PM Jun 06,2019 Chennai

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நாட்கள் கடந்து சென்றாலும், அது ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை இன்றும் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நாட்டின் மூன்று மூளைகளைக் கைப்பற்றினால் தெற்கு பகுதியை பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை, நாட்டின் 70 ஆண்டுகால அரசியல் கட்சியைக் கடந்த இரண்டு தேர்தல்களில் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது பாஜக, சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிகரமாக ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்காகப் பாஜக செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?

நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் என்பதைத் தாண்டி உலகின் காஸ்ட்லியான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. இது தேர்தல் ஆணையம் தேர்தலுக்குச் செலவழித்ததை வைத்து மட்டுமில்லாது, ஒரு தனிக் கட்சி தேர்தலுக்காகச் செலவழித்ததை வைத்து கணக்கிட்டது. Centre for Media Studies நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பதைக் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வானது ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக எவ்வளவு செலவு செய்தது என்பதை நேரடியாகச் சென்று விசாரித்து, ஆராய்ந்து, மதிப்பிட்டு கூறியுள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காகப் பாஜக கட்சி சுமார் 27,000 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். அதாவது இந்தத் தேர்தலுக்காக ஒரு நபருக்கு ரூபாய் 700 அல்லது ஒரு தொகுதிக்கு 100 கோடி செலவழித்துள்ளதாக இந்த ஆய்வுக்குறிப்புத் தெரிவிக்கிறது. இதில் 12,000 கோடி முதல் 15,000 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கும், 20,000 கோடி முதல் 25,000 கோடி ரூபாய் வரை பிரச்சாரம் மற்றும் விளம்பரங்களுக்குச் செலவழித்துள்ளனர். இந்தத் தேர்தலுக்காகப் பாஜக கட்சி சுமார் 60,000 ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டதாகவும், அதில் 45 சதவீதம் அதாவது 27,000 கோடி ரூபாய் மட்டுமே செலவளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1998-ம் ஆண்டின் தேர்தலின் போது பாஜக கட்சி 20 சதவீதம் மட்டுமே தேர்தலுக்காகச் செலவழித்துள்ளது. இதுகுறித்து Centre for Media Studies குழுவினர் கூறுகையில், அடுத்தத் தேர்தலுக்குப் பாஜக கட்சி 1 டிரில்லியன் வரை செலவு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top