#BJD அரசு பொறியாளர்களை நடுரோட்டில் தோப்புக்கரணம் போடவைத்த ஒடிஷா எம்எல்ஏ!
  • 11:44AM Jun 07,2019 Odisha
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 11:44AM Jun 07,2019 Odisha

கமெர்ஷியல் திரைப்படங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளைப் பொது இடங்களில் அசிங்கப்படுத்துவது போலச் சில சீன்கள் வரும். தற்போது நாடு இருக்கும் நிலையில் உண்மையாக அப்படிச் சில சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் தண்ணி கேட்டுச் சென்ற பெண்ணை எம்எல்ஏ ஒருவர் அடித்த சம்பவம் வைரலாகப் பரவியது. தற்போது அரசு பொறியாளர்களை நடுரோட்டில் தோப்புக்கரணம் போடவைத்து ஒடிஷா எம்எல்ஏ ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். ஒடிஷா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தின் பாட்னாகர் நகரத்தின் எம்எல்ஏவாக இருப்பவர் சரோஜ் குமார் மேகர். பிஜு ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இவர் தனது தொகுதியில் ஆய்வு செய்வதற்காக நேற்று சென்றுள்ளார்.

BJD MLA forces a PWD engineer to do sit ups in public

இந்த ஆய்வின் போது அப்பகுதியில் புதிதாகப் போடப்பட்ட சாலை சில நாட்களிலேயே சேதமடைந்ததாக அவர் தொகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி அதிகாரிகள் தரமற்ற வேலை செய்ததே சாலை சேதமடைந்ததற்கு முக்கியக் காரணமாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சரோஜ் குமார் அரசு பொறியாளர்களைத் திட்டியுள்ளார். அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் அரசு பொறியாளர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கும்படி கேட்டுள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையில் நடுரோட்டில் அரசு பொறியாளர்களைத் தோப்புக்கரணம் போடவைத்துள்ளார். தற்போது அரசு பொறியாளர்கள் தோப்புக்கரணம் போடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்துப் பேசுகையில், மக்கள் கேட்டுக்கொண்டதால் அப்படிச் செய்தேன், நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன் என்று சரோஜ் குமார் மேகர் கூறியுள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top